‘சிதம்பரம் ரயில்வே கேட்’ திரைப்படம் ஜனவரி 28-ம் தேதி வெளியாகிறது..!

‘சிதம்பரம் ரயில்வே கேட்’ திரைப்படம் ஜனவரி 28-ம் தேதி வெளியாகிறது..!

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரிப்பாளர் S.M.இப்ராஹிம் தயாரித்துள்ள திரைப்படம் ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’.

இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன்,  மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்.   நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார்,  இரண்டாம் நாயகியாக  காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும், லொள்ளு சபா’ மனோகர் மற்றும் ‘பிக் பாஸ்’ டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை  R.வேல் கையாண்டுள்ளார். படத் தொகுப்பை சுரேஷ் URS  கையாண்டுள்ளார். கலை இயக்கத்தை மார்ட்டின் மேற்கொண்டுள்ளார். கார்த்திக் ராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார். மேலும் இசை ஞானி இளையராஜாவும் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அறிமுக இயக்குநரான சிவ பாலவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழு, படக் குழுவினரை பெரிதும் பாராட்டி U’ சான்றிதழ் அளித்துள்ளது.

இப்படம் வரும் ஜனவரி 28-ம் தேதி திரைக்கு வருமென படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.