லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் சார்பில் சென்னையில் வருடந்தோறும் நடத்தப்படும் ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெறவிருக்கிறது.
இது அவர்கள் நடத்தும் 10-வது ஆண்டு நிகழ்ச்சியாகும். வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 25-ம் தேதிவரையிலும் இந்த இசை நிகழ்ச்சிகள் காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளன.
இந்தாண்டு நிகழ்ச்சியில் மஹதி, சின்மயி, மகாநதி ஷோபனா, சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன், செளம்யா, பிரியா சகோதரிகள், ரஞ்சனி சகோதரிகள், உன்னிகிருஷ்ணன், கார்த்திக், ஹரிச்சரண் ஆகியோரின் பாடல் கச்சேரிகளும், நடிகை ஷோபனா, மீனாட்சி ராகவன், ஷோபனா ரமேஷ், சுபத்ரா மாரிமுத்து, ஸ்ரீகலா பரத், ஊர்மிளா சத்யநாராயணன் ஆகியோரின் நடனங்களும் இடம் பெற இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா வருகிற டிசம்பர் 18-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பிரபல நாதஸ்வர இசைக் கலைஞர் ‘திருவிழா ஜெய்சங்கர்’ அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
மாலை 5 மணிக்கு கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய ‘பத்மபூஷண்’ பி.எஸ். நாராயணசாமி அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ’பஞ்சரத்ன கீர்த்தனைகளை’ ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர்.
மாலை 6.00 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முறைப்படி இந்த 10-ம் வருடத்திய ‘சென்னையில் திருவையாறு’ இசை விழாவைத் தொடங்கி வைக்கின்றார்.
வருடந்தோறும் இந்த இசை நிகழ்வில் மூத்த இசைக் கலைஞர் ஒருவருக்கு பட்டம் வழங்கப்பட்டு அவர் கெளரவிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு நாதஸ்வர இசை மேதை ‘திருவிழா ஜெய்சங்கர்’ அவர்களின் வாழ்நாள் இசைச் சேவவையை பாராட்டி அவருக்கு ‘இசை ஆழ்வார்’ என்ற பட்டமும் தங்கப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது. இப்பட்டத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் வழங்கி சிறப்பிக்கின்றார்.
இரவு 7.30 மணிக்கு வயலின் கலைஞர்கள் கணேஷ், குமரேஷ் இருவரும் இணைந்து வழங்கும் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து மறுநாள் 19-ம் தேதி முதல் தினமும் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
காலை 7.00 மணிக்குத் துவங்கி, இரவு 10.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சி அட்டவணை :
|
|||
18.12.2014 வியாழக்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
மாலை 3.00 மணி | திருவிழா ஜெய்சங்கர் | நாதஸ்வரம் | |
மாலை 5.00 மணி | பி.எஸ்.நாராயணசாமி | பஞ்சரத்ன
கீர்த்தனைகள் |
|
மாலை 6.00 மணி | முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைக்கிறார். | ||
இரவு 7.30 மணி | கணேஷ் – குமரேஷ் | வயலின் | |
19.12.2014 வெள்ளிக்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
காலை 7.00 மணி | உடையாளூர் கல்யாணராமன் | நாம சங்கீர்த்தனம் | |
காலை 9.00 மணி | நர்மதா | வயலின் | |
காலை10.30 மணி | ஷோபனா ரமேஷ் | பரதநாட்டியம் | |
மதியம் 1.00 மணி | சங்கரி கிருஷ்ணன் | வாய்பாட்டு | |
மதியம் 2.45 மணி | கர்நாட்டிகா சகோதரர்கள் & துஷ்யந்த் ஸ்ரீதர் | சங்கீத உபன்யாசம் –
(சீனிவாச கல்யாணம்) |
|
மாலை 4.45 மணி | ப்ரியா சகோதரிகள் | வாய்பாட்டு | |
இரவு 7.30 மணி | ராஜேஷ் வைத்யா | வீணை | |
20.12.2014 சனிக்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
காலை 7.00 மணி | செங்கோட்டை ஹரி | நாம சங்கீர்த்தனம் | |
காலை 9.00 மணி | சுபத்ரா மாரிமுத்து | பரதநாட்டியம் | |
காலை 10.30 மணி | திருச்சூர் சகோதரர்கள் | வாய்பாட்டு | |
மதியம் 1.00 மணி | ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன் | வாய்பாட்டு | |
மதியம் 2.45 மணி | ஷோபனா விக்னேஷ் | வாய்பாட்டு | |
மாலை 4.45 மணி | பி.உன்னிகிருஷ்ணன் | வாய்பாட்டு | |
இரவு 7.30 மணி | சுதா ரகுநாதன் | வாய்பாட்டு | |
21.12.2014 ஞாயிற்றுக்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
காலை 7.00 மணி | சுசித்ரா | ஹரிகதா | |
காலை 9.00 மணி | ஷியாமளி வெங்கட் | புல்லாங்குழல் | |
காலை 10.30 மணி | கிருஷ்ணகுமாரி நரேந்திரன் | பரதநாட்டியம் | |
மதியம் 1.00 மணி | மீனாட்சி ராகவன் | பரதநாட்டியம் | |
மதியம் 2.45 மணி | ஸ்ரீமதுமிதா | வாய்பாட்டு | |
மாலை 4.45 மணி | ரஞ்ஜனி காயத்ரி | வாய்பாட்டு | |
இரவு 7.30 மணி | சின்மயி ஸ்ரீபதா | வாய்பாட்டு | |
22.12.2014 திங்கட்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
காலை 7.00 மணி | தாமல் ராமகிருஷ்ணன் | பக்தி பிரசங்கம் | |
காலை 9.00 மணி | எஸ்.ஐஸ்வர்யா | வாய்பாட்டு | |
காலை 10.30 மணி | வலையப்பட்டி எஸ்.மலர்வண்ணன் | தவில் | |
மதியம் 1.00 மணி | அபினவ் & பத்மாஸனி ஸ்ரீதரன் | வாய்பாட்டு | |
மதியம் 2.45 மணி | ராமகிருஷ்ண மூர்த்தி | வாய்பாட்டு | |
மாலை 4.45 மணி | மஹதி | வாய்பாட்டு | |
இரவு 7.30 மணி | நித்யஸ்ரீ மகாதேவன் | வாய்பாட்டு | |
23.12.2014 செவ்வாய்க்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
காலை 7.00 மணி | சட்டநாத பாகவதர் | நாம சங்கீர்த்தனம் | |
காலை 9.00 மணி | பி.எச்.ரமணி | வாய்பாட்டு | |
காலை 10.30 மணி | சாஸ்வதி பிரபு | வாய்பாட்டு | |
மதியம் 1.00 மணி | ஷ்ரவன் | வாய்பாட்டு | |
மதியம் 2.45 மணி | பத்மா சங்கர் | வயலின் | |
மாலை 4.45 மணி | ஜெயந்தி குமரேஷ் & அணில் சீனிவாசன் | வீணை & பியானோ | |
இரவு 7.30 மணி | ஷோபனா | பரதநாட்டியம் | |
24.12.2014 புதன்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
காலை 7.00 மணி | மங்கையர்க்கரசி | பக்தி பிரசங்கம் | |
காலை 9.00 மணி | சரண்யா ஸ்ரீராம் | வாய்பாட்டு | |
காலை 10.30 மணி | ஸ்ரீகலா பரத் | பரதநாட்டியம் | |
மதியம் 1.00 மணி | விதிஷா | பரதநாட்டியம் | |
மதியம் 2.45 மணி | ஹரிசரண் | வாய்பாட்டு | |
மாலை 4.45 மணி | எஸ்.செளம்யா | வாய்பாட்டு | |
இரவு 7.30 மணி | கத்ரி கோபால்நாத் | சாக்ஸஃபோன் | |
25.12.2014 வியாழக்கிழமை | |||
நேரம் | கலைஞர்கள் | பிரிவுகள் | |
காலை 7.00 மணி | சிந்துஜா | ஹரிகதா | |
காலை 9.00 மணி | ராகினிஸ்ரீ | வாய்பாட்டு | |
காலை 10.30 மணி | ஊர்மிளா சத்யநாராயணன் | பரதநாட்டியம் | |
மதியம் 1.00 மணி | டாக்டர்.கணேஷ் | வாய்பாட்டு | |
மதியம் 2.45 மணி | ஷோபா சந்திரசேகர் | வாய்பாட்டு | |
மாலை 4.45 மணி | அருணா சாய்ராம் | வாய்பாட்டு | |
இரவு 7.30 மணி | கார்த்திக் | வாய்பாட்டு |
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு காமராஜர் அரங்கத்தை ஒட்டியிருக்கும் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட காங்கிரஸ் மைதானத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாள்தோறும் பல ஆயிரம் பேர் கூடுவதால், அரங்கின் வெளி மண்டபத்தில் பல்வேறு விதமான விற்பனையரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் இசைத் துறை பற்றிய கண்காட்சிகள், இசைக் கருவிகள், கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அழகு சாதனங்கள், ஆடை அணிகலன்கள், உணவுத் தயாரிப்பு தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி-க்கள், சி.டி-க்கள், ஆன்மிக புத்தகங்கள், பூஜை பொருட்கள், இசைக் கருவிகள் குறித்த புத்தகங்கள் கொண்ட அரங்குகளும் இடம் பெறுகின்றன.
மேலும் பதிப்பகங்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் மையங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவன மையங்கள், சமூக சேவை மையங்கள், வீடுமனை விற்பனையாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
இருபதாயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் பிரமாண்டமான அரங்கத்திற்குள் தமிழகத்தின் முன்னணி உணவகங்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவு அரங்கங்களும், 300 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன.
இந்த வகையில் பிரபல உணவகங்கள் தங்கள் சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் தரமான உணவு வகைகளை, ஒரே இடத்தில் நீங்கள் விரும்பும் வகையில் வழங்குகின்ற பாங்கு இசைப்பிரியர்களை ஈர்த்து திக்கு முக்காட வைக்க இருக்கிறது. தானிய வகை உணவுகளும், காய்கறி உணவுகளும், கீரை மற்றும் பழவகை உணவுகளும் இங்கே மணக்க இருக்கின்றன. இவ்வாறாக பல்வேறு சிறப்பம்சங்களோடு உணவுத் திருவிழா இந்தாண்டும் உண்டு.
சிறுவர்களுக்குண்டான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாடுவதற்கான வசதிகள், குழந்தைகளோடு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப் படைப்புகளையும், சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள், நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள் இந்த உணவுத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக அணி வகுக்கின்றன.
இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க, கேட்க, ரசிக்க வரும் ரசிகர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன. அரங்கிற்குள் வருகின்ற ரசிகர்கள் நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் அறிவுத் திறன் கேள்விக்கான பதிலை தங்கள் நுழைவுச் சீட்டில் குறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் எழுதி, அரங்கில் பணியாளர்கள் கொண்டு வரும் பெட்டிகளில் சேர்க்க வேண்டும். சரியான விடையெழுதிய 5 ரசிகர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.
கோ ப்ரசென்டட் ஸ்பான்சர் செய்யும் சத்யா நிறுவனம் நிகழ்ச்சியைக் காண வரும் ஒவ்வொரு ரசிகருக்கும் 500 ரூபாய் மதிப்பிலான பரிசுக் கூப்பன் வழங்க உள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று, எட்டு நாட்களிலும் தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து ரசிகர்களிலிருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதற்கான இரண்டு விமான டிக்கெட்டுகள் கும்பகோணம் அரசு ஜுவல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பம்பர் பரிசாக வழங்கப்படும்.
மற்றொரு ரசிகருக்கு 2400 சதுர அடி மனை மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டீஸ் நிறுவனத்தின் சார்பாக மெகா பரிசாக வழங்கப்பட உள்ளது.
அனைத்து நிகழ்ச்சிகளையும் காண்பதற்கென தொடர் அனுமதிச் சீட்டும் (Season Ticket) தனித்தனியாக தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான தனியாக ஒரு அனுமதிச் சீட்டும் (Individual Show Ticket) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மொத்தமாக நுழைவுச் சீட்டுகள் (BulkBooking) வாங்குவோருக்கும், பொது சேவை நிறுவனங்கள், கலை மன்றங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் பொழுது போக்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.
ரசிகர்களின் வசதிக்காக அனுமதி சீட்டுகள் காமராஜர் அரங்கம் – தேனாம்பேட்டை / லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் – வடபழநி / எம் 6 ஈவண்ட்ஸ் – சி.ஐ.டி நகர், நந்தி சிலை அருகில் / நாயுடு ஹால் – அண்ணா நகர், தி நகர், புரசைவாக்கம் / சத்யா – மேற்கு மாம்பலம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இணையதளம் மூலமாக (Online Ticket Booking) டிக்கெட் முன் பதிவு செய்யவும், டிக்கெட்டுகளைப் பெறவும் கீழ்க்கண்ட இணையத்தளங்கள் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
www.lakshmansruthi.com, www.vikatan.com, www.ticketnew.com, www.madrasevents.in.
‘சென்னையில் திருவையாறு’ பற்றிய நிகழ்ச்சிகள் பற்றி விபரங்கள் அறியவும், டிக்கெட்டுகள் வாங்கவும் ஆண்ட்ராட்ய்ட் ஆப்ஸ் மூலமாக பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். CT APPS என்ற இந்த ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் வசதியை www.ticketnew.com இசை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குகிறது.
மேலும் டிக்கெட் விபரங்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும் :
044-44412345, 9941922322, 9841907711, 88070 44521
மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைய பக்கங்களுக்கு விஜயம் செய்யுங்கள்.
www.chennaiyilthiruvaiyaru.com http://www.lakshmansruthi.com/Food-Festival/index.asp and https://www.facebook.com/LakshmanSruthi
தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ct@lakshmansruthi.com
தொலைபேசியில் தொடர்பு கொள்ள : 044-44412345, 9941922322, 9841907711, 88070 44521.