full screen background image

‘சென்னை சிங்கம்ஸ்’ அணி சாம்பியன் பட்டம் வென்றது..!

‘சென்னை சிங்கம்ஸ்’ அணி சாம்பியன் பட்டம் வென்றது..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக இன்று நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் நடிகர் சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’ அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நடிகர் நாசர் தலைமையில் புதிய அணி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு புதிய கட்டிடம் கட்டும் வேலைகள் மும்முரமாக நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கட்டிடம் கட்ட ஆகும் செலவுக்காக திரைப்பட நடிகர்கள் பங்கு கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்தார்கள்.

IMG_8860 IMG_8846

அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஒரு அணிக்கு 6 பேர் வீதம் 8 அணிகள் இதில் கலந்து கொண்டன.  போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகளும் 5 ஓவர்கள் கொண்டதாக இருந்தன.

IMG_8929

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், கர்நாடக அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ், அவரது மனைவியும் நடிகையுமான சுமலதா, தெலுங்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜேந்திர பிரசாத், ஜெயசுதா, மெகா ஸ்டார் மம்மூட்டி என்று மிகப் பெரிய நடிகர், நடிகைகள் இந்த நட்சத்திரப் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியிடும் அணிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. காலை 10 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும், கமல்ஹாசனும் முதல் போட்டிக்கு டாஸ் போட்டுக் கொடுத்து போட்டியைத் துவக்கிக் கொடுத்தனர்.

IMG_8951

முதல் போட்டியில் ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியும் ‘திருச்சி டைகர்ஸ்’ அணியும் மோதின. முதலில் ஆடிய ‘திருச்சி டைகர்ஸ்’ அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்த்து. அந்த அணியைச் சேர்ந்த அசோக் செல்வன் 10 ரன்களும், சிவகார்த்திகேயன் 24 ரன்களும், சதீஷ் 18 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ‘சென்னை சிங்கம்ஸ்’ அணி 4.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

IMG_8969

இரண்டாவது போட்டியில் ‘ராம்நாட் ரைனோஸ்’ அணியும், ‘கோவை கிங்க்ஸ்’ அணியும் மோதின. முதலில் ஆடிய ‘ராம்நாட் ரைனோஸ்’ அணி 5 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்த்து. கலையரசன் 12 ரன்கள், ஸ்ரீகாந்த் 5 ரன்கள், வெங்கட் 8 ரன்கள், விஜய் சேதுபதி 22 ரன்களையும் எடுத்தனர்.

பின்பு ஆடிய ‘கோவை கிங்க்ஸ்’ அணி 5 ஓவர்களில் 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்த்து. இந்த அணியில் பரத் 18 ரன்களும், சஞ்சய் 13 ரன்களும், ரித்தீஷ் 3 ரன்களும் எடுத்தனர்.

மூன்றாவது போட்டியில் ‘சேலம்  சீட்டாஸ்’ அணியும், ‘மதுரை  காளைஸ்’ அணியும் மோதின. முதலில் விளையாடிய ‘மதுரை காளைஸ்’ அணி 5 ஓவர்களில் 59 ரன்கள் எடுத்த்து. ரமணா 10, ரிஷி 28, விஷால் 2, சுரேஷ் 12 ரன்களையும் எடுத்தனர்.

இதன் பின்பு ஆடிய ‘சேலம் சீட்டாஸ்’ அணி 5 ஓவர்களில் 60 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ரமேஷ் 26 ரன்களும், ஆர்யா 14 ரன்களும் எடுத்தனர்.

நான்காவது போட்டியில் ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணியும், ‘நெல்லை டிராகன்ஸ்’ அணியும் மோதின. முதலில் ஆடிய ‘நெல்லை டிராகன்ஸ்’ அணி 5 ஓவர்களில் 51 ரன்களை எடுத்த்து. இதில் நட்டி நட்ராஜ் 7, பிருத்விராஜ் 25,  சவுந்தர்ராஜா 18 ரன்களையும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி 5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் லஷ்மண் 10, சரண் 18, ஜீவா 14 ரன்களை எடுத்தனர்.

நாக்அவுட் முறையில் தோல்வியடைந்த அணிகள் வெளியேற்றப்பட்ட பிறகு மீதமிருந்த 4 அணிகள் செமி பைனலில் கலந்து கொண்டன.

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதில் முதல் செமி பைனலில் ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியும், ‘சேலம் சீட்டாஸ்’ அணியும் மோதின.

முதலில் ஆடிய ‘சென்னை சிங்கம்ஸ்’ அணி 78 ரன்களை குவித்த்து. இந்த அணியில்  உதய் 20, விக்ராந்த் 22, சிவா 12, நந்தா 7, அருண் 8 ரன்களையும் எடுத்தனர்.

பின்பு விளையாடிய ‘சேலம் சீட்டாஸ்’ அணி மிகவும் போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த்து. ஆர்யா 20, சாந்தனு 27, ஆதவ் 8 ரன்களையும் எடுத்தனர்.

இரண்டாவது செமி பைனலில் ‘ராம்நாட் ரைனோஸ்’ அணியும், ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணியும் மோதின. முதலில் விளையாடிய ‘ராம்நாட் ரைனோஸ்’ அணி 45 ரன்களை எடுத்த்து. ஹரீஷ் 10, அம்சவர்த்தன் 11, ஸ்ரீகாந்த் 7 ரன்களை எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி  3.1 ஓவர்களில் 50 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. லஷ்மண் 25, ஜீவா 11, சரண் 12 ரன்களும் எடுத்தனர்.

இறுதிப் போட்டியில் ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியும், ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணியும் மோதின.

முதலில் விளையாடிய ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி இந்தப் போட்டியில் உயர்ந்தபட்ச ஸ்கோராக 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை குவித்தது. இந்த அணியில் சார்பில் விளையாடிய லஷ்மண் 27 ரன்களும், சரண் 27 ரன்களும், பாண்டி 8 ரன்களும், ஆரி 8 ரன்களும் எடுத்தனர்.

பின்பு விளையாடிய ‘சென்னை சிங்கம்ஸ்’ அணி மிக பிரமாதமாக விளையாடி 4.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை குவித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்த அணியில் விக்ராந்த் 20 ரன்கள், உதய் 22 ரன்கள், சிவா 15 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.

அனைத்து போட்டிகளிலும் மிக அதிகமாக உதிரி ரன்கள்தான் சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியைவிடவும், ‘தஞ்சை வாரியர்ஸ்’ அணி அதிகமாக உதிரிகளை விட்டுக் கொடுத்ததால்தான் அந்த அணி தோற்க நேர்ந்தது.

ஒவ்வொரு போட்டி முடிந்த பின்பும் அந்தப் போட்டியின் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருதும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.

IMG_9038

போட்டியின் இடையிடையே ஆடல், பாடல், கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல நடிகர், நடிகைகள் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர். இந்த வெயிலின் காரணமாகவே ரசிகர்களின் கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக ஸ்டேடியத்திற்கு வந்து குவிந்தது.

இன்றைக்கு சீயான் விக்ரமின் பிறந்த நாள் என்பதால் அவரது பிறந்த நாளும் ஸ்டேடியத்தில் கொண்டாடப்பட்டது. மெகா ஸ்டார் மம்மூட்டி பிறந்த நாள் கேக்கை வெட்டி விக்ரமிற்கு கேக் ஊட்டினார். பின்பு சினிமா பிரபலங்கள் பலரும் விக்ரமிற்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

‘மேன் ஆஃப் தி சீரியஸ்’ விருது நடிகர் விக்ராந்திற்கு வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற ‘சென்னை சிங்கம்ஸ்’ அணிக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசுக் கோப்பையை வழங்கி கெளரவித்தார். நடிகர் சங்கத்தின் செயலாளர் நடிகர் விஷால் நன்றி கூறினார்.

Our Score