‘கோச்சடையான்’ படம் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் அப்படத்திற்கு தியேட்டர்களில் மிகச் சரியான கட்டணத்தையே வசூல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முத்தையா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கோச்சடையான்’ படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
திரையரங்குகளில் துவக்க நாள் மற்றும் அதற்கடுத்த நாட்களில் 200, 300 என்று கட்டணங்களை உயர்த்தி மிக அதிகமாகக் கொள்ளையடிக்கிறார்கள் என்றும், இது போன்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பதே கூடாது என்றும், வரிவிலக்கினால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்று வாதிடப்பட்டதாம்..
இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், “கோச்சடையான்’ படம் நாளை ரிலீஸாகலாம். ஆனால் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்திருக்கும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு உயர்வாக வசூலிக்கக் கூடாது…” என்று உறுதியாக உத்தரவிட்டுள்ளது.
இதையெல்லாம் கேக்குற நிலைமையிலா திரையரங்கு உரிமையாளர்கள் இருக்காங்க..? இல்லாட்டி கரெக்ட்டான காசுக்குத்தான் நாங்க டிக்கெட் எடுப்போம்ன்ற மனநிலையிலா ரஜினி ரசிகர்கள் இருக்காங்க..? அவங்களுக்கு முதல் நாளே அவங்க தலைவர் படத்தைப் பார்த்தே ஆகணும். அதுதான் அவர்களது கொள்கை..
இது போன்ற ரசிகர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது..?