full screen background image

பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி..!

பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி..!

பிரசாத் ஸ்டுடியோவில் தான் பயன்படுத்திய ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளவும், ஸ்டியோவுக்குள் தியானம் மேற்கொள்ளவும் தன்னை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு உதவியாளர், ஒரு இசைக் கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்ற நிபந்தனையை ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளையராஜா தரப்பில், பிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன் என்றும் தனது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்வேன் என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜா செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா செல்லும் தேதியை அவர் பிரசாத் நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரையிலும் அவர் அந்த ஸ்டூடியோவில் இருக்கலாம்.

மேலும், இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும்போது அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை கவனிக்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் ஆணையராக செயல்படுவார் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Our Score