full screen background image

தொடர்ந்து மூன்று சதங்களை அடித்திருக்கும் ‘சென்னை 28 – 2-ம் பாகம்’

தொடர்ந்து மூன்று சதங்களை அடித்திருக்கும் ‘சென்னை 28 – 2-ம் பாகம்’

வழக்கமான  ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை வழக்கத்திற்காக மாறான புதுமையான முறையில் சித்தரிப்பதே, எதற்கும் ‘டென்ஷன்’ ஆகாத இயக்குநர் வெங்கட் பிரபுவின் தனிச் சிறப்பு.

சமீபத்தில் இவர் ‘சென்னை 28 – 2-ம் பாகம்’ படத்திற்காக ‘யூடியூபில்’  வெளியிட்ட இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் பல ஆண்டு காலமாக  விடை தெரியாமல் வலம் வந்து கொண்டிருந்த ஒரு கேள்வி,  “கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா….?” தற்போது அந்த கேள்விக்கு தன்னுடைய டீசர் மூலம் விடை அளித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் என வெளியான  மூன்று காணொளிகளும் தற்போது பத்து லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்களை கடந்திருப்பது ‘சென்னை 28 – II’ படத்திற்கு கிடைத்த கூடுதல் சிறப்பு.

இது பற்றிப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, “எங்கள் சென்னை 28 2-ம் பாகத்தின் இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் மூலம் நாங்கள் தொடர்ந்து மூன்று சதம் அடித்திருப்பது, எங்கள் ஒட்டு மொத்த குழுவினருக்கும்  பெருமையைக் கொடுத்திருக்றது. இந்த அளவுக்கு எங்கள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு, எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்….” என்று உற்சாகமாக கூறினார்.

Our Score