ஜி ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘சென்னை 2 பாங்காக்’

ஜி ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘சென்னை 2 பாங்காக்’

ஜி ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் K.ஷாஜகான் மற்றும் K.ஆனந்தனின் தயாரிப்பில் ‘சென்னை 2 பாங்காக்’ என்ற புதிய படம் உருவாகி வருகிறது.

c2b-7

இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகிகளாக சோனி சரிஷ்டா, அர்ச்சனா, யாழினி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், வில்லன் வேடத்தில் தினேஷ் மேட்னே மற்றும் சுமா, சுஜா ஆகியோர் நடிக்கின்றனர்.

சண்டை பயிற்சி – மெட்ரோ மகேஷ், மக்கள் தொடர்பு – செல்வரகு, இசை – U.K.முரளி, ஒளிப்பதிவு – தேவராஜ், படத்தொகுப்பு – B.பிரியஜித் பிரேம்நாத், வசனம் – M.தனசேகர், தயாரிப்பாளர்கள்  – K.ஷாஜகான், K.ஆனந்தன், இயக்கம் – தியாகராஜ்.

c2b-26

விபச்சாரத் தொழிலுக்காக இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு கடத்தப்படும் பெண்களை, போலீஸ் தேர்வில் தோல்வி அடைந்த ஹீரோ, தன் நண்பர்கள் துணையோடு எப்படி மீட்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம். 

இதன் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை, கொடைக்கானல், கோவா, பாங்காக், பட்டாயா, புக்கட் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.

c2b-29

மேலும் இப்படத்தில் சண்டை காட்சிகளும் பரபரப்பான சேஸிங் காட்சிகளும் இடம் பெறவுள்ளன. இதில் தாய்லாந்து நாட்டு சண்டை கலைஞர்கள் இடம் பெறவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று காலை சென்னை வடபழனி ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள புதிய விநாயகர் கோவிலில் நடைபெற்றது. இயக்குநர் பிரபு சாலமன் இதில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

c2b-30

அப்போது ஜெய் ஆகாஷ், பவர் ஸ்டார், ஷாம்ஸ், அஸ்வின் நடித்த காட்சி படமாக்கப்பட்டது.  “நான் எடுக்குற இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அடையணும்” என ஜெய் ஆகாஷ் பேசுவது போலவும், அதற்கு பவர் ஸ்டார், ஷாம்ஸ், அஸ்வின் கூட்டாக “கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றி அடையும் ஜெய். இனிமே எல்லாம் உனக்கு ஜெயந்தாண்டா” என்று பதில் சொல்வது போன்ற காட்சி முதல் காட்சியாக படமாக்கப்பட்டது. 

இந்த துவக்க விழாவில் இயக்குநர் பிரபு சாலமன், பட நாயகிகள் சோனி சரிஷ்டா, யாழினி, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், தினேஷ் மேட்னே, சுமா, பொன்னம்பலம், டைமண்ட் பாபு,  படத்தின் இயக்குநர் தியாகராஜ், இசையமைப்பாளர் U.K.முரளி, கேமராமேன் தேவராஜ், மெட்ரோ மகேஷ், செல்வரகு  உட்பட பல பிரபலங்கள் பட பூஜையில் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் K.ஷாஜகான், K.ஆனந்தன் ஆகியோர் வரவேற்றனர்.

Our Score