full screen background image

நடிகர் ஆதேஷ் பாலா ஹீரோவாக நடிக்கும் ‘செஞ்சி கோட்டை’

நடிகர் ஆதேஷ் பாலா ஹீரோவாக நடிக்கும் ‘செஞ்சி கோட்டை’

பேட்டை’, ‘முண்டாசுபட்டி’, ‘ஆறு’ போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கும் பிரபல நடிகரான ஆதேஷ் பாலா, தற்போது முதன்முதலாக செஞ்சி கோட்டை’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் இரட்டை கதாநாயகிகளாக சொஹாணி விருபாக்‌ஷா மற்றும் நடிகை பிரியங்கா இருவரும் அறிமுகமாகியுள்ளனர்.

கில்லி’ புகழ் கராத்தே ராஜா, அறம்’ திரைப்பட புகழ் மகிமை ராஜு, அறிமுக வில்லனாக ஷியாம் ஜீவாவும், வில்லியாக கவிதா விருபாக்‌ஷாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

இதில் வில்லியான கவிதா விருபாக்‌ஷாவும், நாயகி சொஹாணி விருபாக்‌ஷாவும், நிஜ வாழ்க்கையில் தாய், மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மைனா’ படத்தில் நடித்த பழம் பெரும் நடிகரான கும்பிடு குருசாமியும், தீபாவளி வாழ்த்துக்கள்’ வெங்கைய்யா பாலனும் நட்புக்காக இதில் நடித்துள்ளனர்.

மேலும் மாஸ்டர்’ படத்தில் சீர்திருத்தப் பள்ளி சிறுவனாக நடித்த ஆஜய்யும் மற்றும் அறிமுக நடிகைகள், பவுனம்பாள், ஸ்ரீஜோதி, மீனா ஜெயந்தாரா, நடிகர்கள் எஸ்.ரமேஷ் மற்றும் கேசவ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் வெளிப்புற காட்சிகள் செஞ்சியை அடுத்துள்ள பழைய சுரத்தூர் கிராமத்து மலைகளிலும், திருவண்ணாமலையில் நந்தி தீர்த்தம் மலை அடிவாரத்திலும் இதுவரை கண்டிராத கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. அதே சமயம் இசையமைப்பாளர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.

சண்டை காட்சிகள் பேசப்படும்விதமாக அமைந்துள்ளது. கதாநாயகனும், ஊர் பஞ்சாயத்து தலைவரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சியில் ஊர் மக்களும் மிக இயல்பாக நடித்து ஒரே டேக்கில் ஒகே செய்திருக்கிறார்கள்.

இந்த ‘செஞ்சி கோட்டை’ படம் பற்றி இயக்குநர் சந்தோஷ் நவீன் பேசும்போது, “இந்தப் படம் காதல், பாசம், போராட்டம் என பல அம்சங்களை தழுவிய குடும்ப படம். எந்தவொரு ஆபாசமுமின்றி குடும்பத்துடன் பார்க்கும்படி யதார்த்தமான நிகழ்வுகளை கொண்டு உருவாகி வருகிறது.

‘பார்த்தால் பசு; பாய்ந்தால் புலி’ போன்ற கதாபாத்திர வேடத்தில் ஒரு பக்கம் அன்பை பொழிபவராகவும், இன்னொரு பக்கம் ஆக்ரோஷத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் மனிதராகவும் நாயகன் ஆதேஷ் பாலா சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுடன் பிற அறிமுக நடிகர்களுக்கும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்பையும் அள்ளித் தரும் வெற்றிப் படமாக இது அமையும். கூடவே, இந்த செஞ்சி கோட்டை’ படம் நிச்சயமாக தமிழ்ச் சினிமாவில் தனது தனித்துவ முத்திரையை பதிக்கும்…” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Our Score