வித்தியாசமான கதைக் களத்துடன் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது ‘சியான்கள்’ திரைப்படம்

வித்தியாசமான கதைக் களத்துடன் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது ‘சியான்கள்’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் வித்தியாசமான மாறுபட்ட கதைகளில் படங்கள் வெளியாவது என்பது மிக மிக குறைவு. 

அந்த வரிசையில் இந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வித்தியாசமான கதைக் களத்தோடு வெளியாக உள்ளது சியான்கள்’ என்ற திரைப்படம்‌.

இந்த படத்தை வைகறை பாலன் இயக்க, கரிகாலன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், அவரே கே.எல். புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பாக இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

முத்தமிழ்  இந்தப்  படத்திற்கு இசையமைக்க பாபு குமார் ஒளிப்பதிவு செய்து உள்ளார். மப்பு ஜோதிகுமார் படத் தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

தற்போது இந்த படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.