K.L.புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கரிகாலன் தயாரித்துள்ள திரைப்படம் ‘சீயான்கள்’.
‘சீயான்’ என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதைதான் இத்திரைப்படம்.
தேனியை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள அழகான ஒரு சில கிராமங்களில் வசிக்கும் ‘சீயான்’களை இந்தப் படத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.
ஒளிப்பதிவு – I.E.பாபுகுமார், இசை – முத்தமிழ், படத் தொகுப்பு – மப்பு ஜோதி பிரகாஷ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, நிர்வாகத் தயாரிப்பு – இமை.ராஜ்குமார், இணை தயாரிப்பு – லில்லி கரிகாலன், எழுத்து, இயக்கம் – வைகறை பாலன்.
படம் குறித்து இயக்குநர் வைகறை பாலன் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்
நான் எனது இளம் வயதில் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். 4 அல்லது 5 பிரபலமான முகங்கள் தவிர, படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவருமே புதியவர்கள்தான். மேலும் அவர்கள் அனைவருக்கும் நீண்ட காலத்திற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தப் படத்தினை படமாக்கினோம். இதனால் தினமும் நீண்ட தூரத்துக்கு நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது, தினமும் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது. இத்தனை சிரமத்திற்கிடையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம். மொத்தம் 70 நாட்களில் படப்பிடிப்பை நடித்தியுள்ளோம். தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.” என்றார்.