விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..!

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..!

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சக்ரா’.

இந்தப் படத்தில் விஷால் நாயகனாக நடிக்க.. நாயகிகளாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், மற்றும்  ரெஜினா காசன்ட்ரா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம், படத் தொகுப்பு – சமீர் முகமது, கலை இயக்கம் – எஸ்.கண்ணன்,   சண்டை இயக்கம் – அனல் அரசு, மக்கள் தொடர்பு – ஜான்ஸன்.

தொழில்  நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை அறிமுக இயக்குநரான ஆனந்தன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொது முடக்கம் வந்து விட்டது. எனவே  ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு நடைபெறும்.

இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும். படத்தின் டீஸர் விரைவில் வெளிவரும்.

Our Score