இயக்குநருக்கு கார் பரிசு – ஆச்சரியப்பட வைத்திருக்கும் தயாரிப்பாளர்..!

இயக்குநருக்கு கார் பரிசு – ஆச்சரியப்பட வைத்திருக்கும் தயாரிப்பாளர்..!

முதல் பட இயக்குநர்களுக்கு எப்போதுமே பிரசவ வலிதான்.. அந்த முதல் படைப்பு பேசப்படவும் வேண்டும்.. கமர்ஷியல் ரீதியாக ஓடவும் வேண்டும். இது இரண்டுமே இருந்தால்தான் அவருக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். போட்ட காசு கைக்கு வந்தால்தான் அந்தத் தயாரிப்பாளரையே ஏறெடுத்து பார்க்க முடியும் என்று சங்கடப்படும் இயக்குநர்களும் இருக்கிறார்கள்.

படம் வெற்றி பெற்றுவிட்டு, தயாரிப்பாளரின் சூட்கேஸ் நிரம்பி வழிந்தால், இயக்குநர் தனியே வேறொரு தயாரிப்பாளரைத் தேடுவார். தயாரிப்பாளர் வேறொரு இயக்குநரைத் தேடுவார். முதல் பட இயக்குநரை மீண்டும் அடுத்தப் படத்திற்கு புக் செய்வது தமிழ்ச் சினிமாவி்ல அபூர்வம்.

ஆனால் இந்த அபூர்வ நிகழ்வில் எழுத்தாளர் ராஜூ முருகன் சிக்கிக் கொண்டுள்ளார். ‘குக்கூ’ படம் வெற்றியடைந்ததால் அதன் தயாரிப்பாளர் ஆடிட்டர் சண்முகம், படத்தின் இயக்குநர் ராஜூமுருகனுக்கு டஸ்டர் கார் ஒன்றை வாங்கி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இது முதல் அதிர்ச்சி.

அடுத்தது.. அதே நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும் ராஜுமுருகனுக்கே கிடைத்துள்ளது. இந்த 2-வது படத்துக்கான அட்வான்ஸையும் முருகன் பெற்றுக் கொண்டாராம்..

ஆக.. ஒரு வித்தியாசமான தயாரிப்பாளரையும் கொடுத்து வைத்த இயக்குநரையும் தமிழ்த் திரையுலகம் இ்ப்போது கண்டு கொண்டு ஆச்சரியத்தில் இருக்கிறது..!

Our Score