full screen background image

‘மதுர வீரன்’ படத்தின் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டார்

‘மதுர வீரன்’ படத்தின் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டார்

ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மதுர வீரன்.’

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் ’மதுர வீரன்’ திரைப்படம் தற்போது தயாராகியுள்ளது.

இந்தப் படத்தில், சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுகம் மீனாட்சி நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி,  மைம் கோபி,  P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இசை – சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் – யுகபாரதி,  படத் தொகுப்பு – K.L.பிரவீன், கலை – விதேஷ், சண்டை பயிற்சி – ‘ஸ்டன்னர்’ சாம்,  நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன்  ராமசாமி, தயாரிப்பு – விஜி சுப்ரமணியன், ஒளிப்பதிவு, இயக்கம் – பி.ஜி.முத்தையா.

ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம் இது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தின்  இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறவுள்ளது. அங்கு 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று படம் நிறைவடையும்.

V ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் இன்று வெளியிட்டார். அப்போது திருமதி பிரேமலதா விஜயகாந்தும் உடன் இருந்தார்.

Our Score