சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படம் பற்றிய பரபரப்பு செய்திகள் வாரவாரம் வந்து கொண்டேயிருக்கின்றன. லேட்டஸ்ட் செய்தி ரஜினியுடன் பிரிட்டன் நடிகை ஒருவரும் நடித்திருக்கிறார் என்பதுதான்.
அவருடைய பெயர் லாரன் ஜே.இர்வின். பிரிட்டிஷ் படமான ‘ஹார்ட்’, ஹாலிவுட் படமான ‘வகரி’ போன்றவற்றில் நடித்தவர் இந்த லாரன். மேலும் லண்டனின் புகழ் பெற்ற நாடகங்களான வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றிலும் நடித்திருக்கிறார்.
ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்தப் படத்தில் ஏற்கெனவே அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் நடித்து வருகின்றனர். இப்போது புதிதாக இந்த பிரிட்டிஷ் வரவு நடிகையும்.. இவர் 1940-களில் நடக்கும் ஒரு பிளாஷ்பேக் கதையில் ரஜினிக்கு ஜோடியான கேரக்டரில் நடிக்கிறாராம்..! இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்ற வாரம் முழுவதும் பெங்களூரில் ஷூட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு மட்டும் ரஜினியுடன் டான்ஸ் ஆடுகிறார். சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோரும் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.