full screen background image

‘பிரம்ம யுகம்’ படத்தின் மம்மூட்டிக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது!

‘பிரம்ம யுகம்’ படத்தின் மம்மூட்டிக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது!

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பேனர் ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்துடன் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பாளர்கள் சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய பான் இந்திய திரைப்படம் ‘பிரம்ம யுகம்.’

ஒளிப்பதிவு – ஷெஹ்னாத் ஜலால், தயாரிப்பு வடிவமைப்பு – ஜோதிஷ் சங்கர், படத் தொகுப்பு – ஷபீக் முகமது அலி, இசை – கிறிஸ்டோ சேவியர், வசனம் – T.D.ராமகிருஷ்ணன், மேக்கப் – ரோனெக்ஸ் சேவியர், உடைகள் – மெல்வி.ஜே., எழுத்து, இயக்கம் – ராகுல் சதாசிவன்.

இந்த ‘பிரம்ம யுகம்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் துவங்கியது.

தொடர்ச்சியாக 1 மாத காலத்திற்கும் மேல் ஒட்டப் பாலத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பில், நடிகர் மம்முட்டிக்கான பகுதிகள் முழுவதும் இன்று வெற்றிகரமாக படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

மீதமுள்ள ஷெட்யூல் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோருடன் தொடரும். மொத்த படப்பிடிப்பும் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடையும்.

இந்த ‘பிரம்ம யுகம்’ திரைப்படம் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

Our Score