full screen background image

சென்ற வாரத்திய சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்..!

சென்ற வாரத்திய சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்..!

சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கிட்டத்தட்ட மிக அருகில் கணக்கிட்டு வெளிவந்திருக்கிறது.

1. வேலையில்லா பட்டதாரி

சென்ற வார இறுதியில் இப்படம் 1.24 கோடியை வசூலித்து அசத்தியுள்ளது. இந்த வாரமும் இதுதான் முதலிடம். நேற்றுவரை இதன் சென்னை சிட்டி வசூல் மட்டும் 4.05 கோடிகள். கோச்சடையான் சென்னையில் ஐந்தரை கோடி ரூபாயை வசூலித்ததாம். இப்போது மருமகன், மாமனாரை ஈஸியாக தாண்டப் போவது உறுதி என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.. ஏனெனில் இதற்கு எதிராக எந்தப் படமும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்தப் படத்தின் விமர்சனம் இங்கே :

2. திருமணம் எனும் நிக்காஹ்

நடிகை நஸ்ரியா நசீம் தமிழில் ஒப்பந்தமான முதல் படம். ஆனால் அவரது நடிப்புல வாழ்க்கையில் கடைசியாக வெளியாகியுள்ளது. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு இப்போதுதான் வெளியாகியுள்ளது..

சென்ற வார இறுதியில் 24.7 லட்சங்களை வசூலித்துள்ளது. இது சுமாரான வசூல்தான்.. படத்தின் ரிசல்ட்டை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

3. சதுரங்க வேட்டை

மவுத் டாக்கில் பேசப்பட்ட அளவுக்கு இந்தப் படத்தின் வசூல் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. காரணம், மக்கள் இப்போதெல்லாம் வாரத்து்ககு ஒரு படம்தான் குடும்பத்துடன் என்று முடிவு கட்டிவிட்டார்கள். அனைத்து குடும்பங்களும் வேலையில்லா பட்டதாரி நோக்கி ஓட.. நல்ல படமான இதற்கு இரண்டாமிடமே கிடைத்திருக்கிறது..

சென்ற வார இறுதியில் இதன் வசூல் 17.18 லட்சங்கள்.  இதுவரை இதன் சென்னை வசூல் 70 லட்சங்கள்தானாம். மிகக் கொடுமை.. இந்த மக்களை என்னதான் செய்வது..?

இந்தப் படத்தின் விமர்சனம் இங்கே :

4. அரிமா நம்பி

எதிர்பாராத பரபரப்பையும், கவனத்தையும் ஈர்த்த அரிமா நம்பி சென்ற வார இறுதியில் 1.7 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த நான்கு வார வசூலையும் சேர்த்தால் இதன் சென்னை மாநகர வசூல் ஒரு மாதத்தில் 2.5 கோடிகள். பரவாயில்லை ரகம்தான்.

இந்தப் படத்தின் விமர்சனம் இங்கே :

5. இருக்கு ஆனா இல்ல

திகிலான படம் என்று வெறும் பேச்சில் மட்டுமே காட்டியிருக்கும் படம். படத்தில் அதன் தீவிரத்தை காட்டாததால் வெற்றி பெற முடியவில்லை.

சென்ற வார இறுதியில்(ஜுலை 25 முதல் 27 வரை) சென்னை மாநகரில் இதன் வசூல் வெறும் எட்டாயிரம் ரூபாய்கள்தான். அதுவும் 3 நாட்களுக்கு மட்டும்.. ஒரு நாள் கணக்கு போட்டால் மூவாயிரத்து சொச்சம்.. இதுவரை இதன் சென்னை சிட்டி வசூல் 3.3 லட்சங்கள்தானாம்.

இந்தப் படத்தின் விமர்சனம் இங்கே :

இதுதான் இப்போதைய பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்..!

எத்தனை படங்கள் வெளியிடப்பட்டாலும் ஏதாவது ஒன்றுதான் ஹிட்டாகிறது.. அந்த ஒன்றின் வெற்றி எதனால் என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.. அதனால்தான் சினிமாவுலகத்தை மாயவுலகம் என்கிறார்கள்..

இப்போதைக்கு தனுஷுக்கு நேரம் நல்லாயிருக்கு என்பது மட்டும் உண்மை..!  

Our Score