ஹைடெக் கார் திருடனாக நடிக்கும் நட்டி நட்ராஜ் 

ஹைடெக் கார் திருடனாக நடிக்கும் நட்டி நட்ராஜ் 

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு. ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர்  இணைத்து தயாரித்துள்ள படம் ‘போங்கு’.

‘சதுரங்க வேட்டை’ வெற்றி படத்தில் நடித்த நட்டி என்னும் நட்ராஜ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர் 2014-ம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஹிந்தியில் இரண்டு படங்களிலும் மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த ‘காலண்டர் கேர்ள்ஸ்’ என்ற படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் அதுல் குல்கர்னி,  ‘முண்டாசுபட்டி’ ராம்தாஸ்,  அர்ஜுன்,  வில்லன் ஷரத் லோகித்தஷ்வா,   ராஜன், பாவா லட்சுமணன்,  மயில்சாமி,  சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.  

இசை  – ஸ்ரீகாந்த்தேவா, பாடல்கள் – கபிலன், தாமரை, மதன் கார்க்கி, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, கலை – ராஜமோகன், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – கல்யாண், பாப்பி, தயாரிப்பு மேற்பார்வை – ஏ.பி.ரவி, தயாரிப்பு –ரகுகுமார், ஸ்ரீதரன், எழுத்து, இயக்கம் – தாஜ். இவர் பிரபல கலை இயக்குனர் சாபுசிரில் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.                                                                       

படம் பற்றி இயக்குநர் தாஜ் பேசும்போது, “ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதை இது. அவர்கள் ஏன் திருடர்கள் ஆனார்கள்?  அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? சவால்கள் என்னென்ன..? என்பதை சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறோம்.

படத்தில் ஹீரோ நட்ராஜின் தோற்றம் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டைலாக இருக்கும். படத்திற்காக கிளைமாக்ஸ் சண்டை காட்சி ஒன்றை ஒரு வெட்ட வெளி பொட்டலில் நடத்தினோம். கடுமையான வெயில் மற்றும் புழுதி காற்று அதிகமாக வீசியது. அவ்வளவு கஷ்டப்பட்டு கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினோம்.

படத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. படப்பிடிப்பு நடத்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோ ரூமை தேடி இந்தியா முழுவதும் அலைந்தோம். கடைசியில் அஹமதாபாத்தில் உள்ள ஒரு ஷோ ரூமில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினோம்.

அந்த காரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறது. படப்பிடிப்பு சென்னை, அஹமதாபாத், மதுரை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது..” என்றார் இயக்குநர் தாஜ்.

Our Score