“போகன்’ படத்தின் கதை தழுவல்தான்…” – இயக்குநர் லட்சுமண் ஒப்புதல்..!

“போகன்’ படத்தின் கதை தழுவல்தான்…” – இயக்குநர் லட்சுமண் ஒப்புதல்..!

‘போகன்’ படத்தின் கதை விவகாரத்தில் மீண்டும் ஒரு டிவிஸ்ட் பிறந்துள்ளது.

‘போகன்’ படத்தின் கதை தன்னுடையது என்று ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான அந்தோணி தாமஸ் கூறுகிறார்.

அதே நேரம், “போகன்’ திரைப்படத்தின் கதை பல ஆங்கில படங்களை தழுவி எழுதப்பட்டது” என்று இயக்குநர் லட்சுமண் தங்களிடம் கூறி அந்த திரைப்படங்களின் டிவிடிக்களைகூட கொடுத்ததாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் வெளிப்படையாக சொல்லிவிட்டது.

இந்த நேரத்தில் ‘போகன்’ படத்தின் இயக்குநர் லட்சுமண் தனது தரப்பு நியாயத்தை நேற்றைக்கு வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘போகன்’ படத்தின் கதை சில, பல ஆங்கில படங்களை தழுவி எழுதப்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். 

ஆனால் கடைசியில் கதையின் கரு யாருக்கும் சொந்தமில்லை என்றும், தான் யார் கதையையும் திருடவில்லை என்றும், அதற்கான அவசியமும் தனக்கில்லை என்றும் சொல்லியுள்ளார்.

lakshman-statement-bogan-1

lakshman-statement-bogan-2

lakshman-statement-bogan-3

lakshman-statement-bogan-4

Our Score