பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘போகன்.’
சென்ற வருடம் வசூலில் அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ நாயகன் ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மண், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் இந்த ‘போகன்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.
‘தனி ஒருவன்’ படத்தின் சூப்பர் ஹிட் கூட்டணியான ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி கூட்டணியும் கூடுதல் பலம் சேர்க்கிறது போகனுக்கு.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18- ம் தேதி பெரம்பூர் பின்னி மில்லில் துவங்குகிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘டண்டணக்கா’வை போல. ‘போகன்’ படத்திலும் ‘டமால் டுமீல்’ என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார்களாம். இந்தப் பாடல் காட்சியுடன்தான் ‘போகன்’ படப்பிடிப்பு துவங்குகிறது. 20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.