full screen background image

ஜீவா – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பிளாக்’ திரைப்படம்!

ஜீவா – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பிளாக்’ திரைப்படம்!

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திரைப்படம் “பிளாக்”.

இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். கதையின் நாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார். படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம்.

Director – KG. BALASUBRAMANI ( First Film ) DOP – gokul benoy ( monster, Irugapatru ),  Music – Sam C.S Editor- Philominraj ( Maanagaram, Kaithi, Master, Jai Bhim, Vikram, Leo )  Stunts: Metro mahesh  Lyrics: Madhan Karky, Chandru Choreography: Sherif Produced By : Potential Studios.

“ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். நொடிக்கு நொடி அச்சுறுத்தம் படமாக எடுக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட கதைதான் இந்த ‘பிளாக்’ திரைப்படம்.

நம்மை சூழ்ந்திருக்கும் இருளை ‘பிளாக்’ என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டி கொள்ளாமல் இருப்பதையும் ‘பிளாக்’ என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும்..” என்கிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.

சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியீட்டு வேலைகள் நடை பெற்று வருகிறது.

Our Score