full screen background image

நடிகர் வெற்றி-பிரியாலயா நடித்த ‘பிளாக் கோல்டு’ திரைப்படம்!

நடிகர் வெற்றி-பிரியாலயா நடித்த ‘பிளாக் கோல்டு’ திரைப்படம்!

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக நடைபெற்று வந்த “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தயாரிப்பில், எம்.மூர்த்தி தயாரிக்கும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் கோணத்தில் உருவாகியுள்ளது.

கதையின் மையத்தில் ஒரு இளைஞன் மற்றும் நிழல் உலக வணிக மாபியாக்கள் இடையே நடைபெறும் மோதல் இடம் பெறுகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் எவ்வாறு உலகளாவிய வணிகமாக மாறுகிறது என்பதை புதுமையான திரைக்கதையில் சித்தரிக்க முயற்சித்துள்ளனர்.

“எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” போன்ற படங்களில் கவனம் பெற்ற நடிகர் , இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். தயாரிப்பாளர் எம்.மூர்த்தியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A. வெங்கடேஷ், அருள் D. சங்கர், விஜய் டிவி ராமர், ஜீவா ரவி, அஜித் விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

“தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தீரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிந்தைய பணிகள் வேகமாக நடைபெற்று வர, விரைவில் டிரெய்லர் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில் நுட்பக் குழு: 

ஒளிப்பதிவு – சந்தோஷ் குமார் வீராசாமி
இசை – கவாஸ்கர் அவிநாஷ்
பாடல் வரிகள் – மோகன் ராஜன்
எடிட்டிங் – தினேஷ்குமார்
ஆர்ட் – C.S. பாலசந்தர்
சண்டைப்பயிற்சி – “மெட்ரோ” மகேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – V. கலைசங்கர்
புரொடக்ஷன் கண்ட்ரோலர் – M. சிவக்குமார்
பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (AIM)

அதிரடி, திரில்லர், சமூக அடுக்குகளைக் கலந்த கதைமாந்தருடன் “பிளாக் கோல்டு” விரைவில் திரையரங்குகளை நோக்கி வரவிருக்கிறது.

‘Black Gold’ Wraps Up Shooting in Chennai – Vetri Gears Up for an Action Thriller

The shooting of the action thriller Black Gold has been successfully completed in and around Chennai. Produced by and backed by M. Moorthy, the film promises a gripping cinematic experience packed with action and suspense.

Directed and written by , who gained attention with Theerppugal Virkkappadum, the film revolves around the intense conflict between a young man and an underground business mafia network. The storyline explores how something that appears ordinary in everyday life transforms into a massive global business, presented through a fresh and engaging narrative.

Actor , known for his performances in 8 Thottakkal and Jiivi, plays the lead role. Priyalaya stars as the female lead, while producer M. Moorthy also appears in a significant role. The supporting cast includes Livingston, Tulasi, Bigg Boss Abhirami, A. Venkatesh, Arul D. Shankar, Vijay TV Ramar, Jeeva Ravi, Ajith Vignesh, Karate Venkatesh, Japan Kumar, and several others.

Following the positive reception to its first-look poster, the team has announced that post-production work is progressing swiftly. The trailer and official release date will be revealed soon.

Technical Crew: Cinematography – Santhosh Kumar Veerasamy
Music – Kavaskar Avinash
Lyrics – Mohan Rajan
Editing – Dinesh Kumar
Art – C.S. Balachander
Stunt Choreography – “Metro” Mahesh
Production Supervision – V. Kalaichangar
Production Controller – M. Sivakumar
Public Relations – Satheesh (AIM)

Blending action, thrills, and layered storytelling, Black Gold is set to hit theatres soon.

Our Score