J.K. பிலிம் புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.C.பிரபாத் தயாரித்துள்ள திரைப்படம் ‘பில்லா பாண்டி’.
ஆர்.கே.சுரேஷ் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ‘மேயாத மான் இந்துஜா’, சாந்தினி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். நடிகர் சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் நடிகர் விதார்த்தும் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
தயாரிப்பு – K.C.பிரபாத், இணை தயாரிப்பு – P.A.கோட்டீஸ்வரன், இயக்கம் – சரவண சக்தி, வசனம் – M.M.S. மூர்த்தி, ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், படத்தொகுப்பு – ராஜா முகம்மது, கலை – மேட்டூர் சௌந்தர், நடனம் – கல்யாண், விஜி, சாண்டி, சண்டை பயிற்சி – சக்தி சரவணன், பாடல்கள் – கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – தம்பி பூபதி, இணை இயக்கம் – k.முருகன், கிருஷ்ணமூர்த்தி, பாரதி, மக்கள் தொடர்பு – நிகில்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் சரவண சக்தி, “இந்த ‘பில்லா பாண்டி’ திரைப்படம் முழுக்க, முழுக்க ‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும்விதமாக தயாராகி வருகிறது. படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக வரும் R.K.சுரேஷ் சாதிய வெறியை கடுமையாக எதிர்க்கும்விதமான காட்சிகளில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக் கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளது…” என்றார்.