அஜீத்தின் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ திரைப்படம்

அஜீத்தின் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘பில்லா பாண்டி’ திரைப்படம்

J.K.Film Productions சார்பாக தயாரிப்பாளர் K.C.பிரபாத் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பில்லா பாண்டி.’

படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகர் R.K.சுரேஷ், இந்தப் படத்தில் ‘தல’ அஜீத்தின் தீவிர ரசிகனாக கதாநாயகனாக நடித்துள்ளார். ‘மேயாத மான்’  புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் சாந்தினி, தம்பி ராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் K.C.பிரபாத் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

தயாரிப்பு -  K.C.பிரபாத், இணை தயாரிப்பு - PA கோடீஸ்வரன், இயக்கம் – சரவண ஷக்தி, கதை திரைக்கதை வசனம் - எம்.எஸ்.மூர்த்தி, ஒளிப்பதிவு - M.ஜீவன், இசை – இளையவன், படத் தொகுப்பு - ராஜா முகமது, கலை - மேட்டூர் சௌந்தர், பாடல்கள் - கலைக்குமார், தனிக்கொடி, மீனாட்சி சுந்தரம், நடனம் - கல்யாண், விஜி, சேண்டி, சண்டை பயிற்சி - சக்தி சரவணன், மக்கள் தொடர்பு – நிகில்.

விறுவிறுப்பாக இறுதிக் கட்ட பணிகளை நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும், படம் பொங்கல் அன்று வெளியிடப்படவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

"பில்லா பாண்டி’ திரைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்..." என்கின்றனர் படக் குழுவினர்.