full screen background image

‘பிக்பாஸ்’ தர்ஷன் நடிக்கும் மியூஸிக் ஆல்பம் தயாராகி வருகிறது

‘பிக்பாஸ்’ தர்ஷன் நடிக்கும் மியூஸிக் ஆல்பம் தயாராகி வருகிறது

தமிழ் பிக் பாஸ் சீசன்-3’ புகழ் தர்ஷன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமன்றி லஹரி  மியூசிக் தயாரிக்கும் மியூசிக் ஆல்பம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த ஆல்பத்திற்கு கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே மறைந்த நடிகர் விவேக் அவர்களின் எழுமின்’ என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

‘எழுமின்’ படத்திலேயே தனுஷ், அனிருத் போன்ற முன்னணி பிரபலங்களை பாட வைத்தவர் கணேஷ் சந்திரசேகரன். அதேபோல் இந்த  ஆல்பத்திலம் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பாடி உள்ளார்கள். அதன் விவரங்கள் அடுத்தக் கட்டமாக வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார்.

நடனத்தை ஸ்ரீதர் மாஸ்டரும், ஒளிப்பதிவினை மாயோனும் கவனிக்க ஆல்பத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் க.லோகேஸ்வரன். இவர் மாநாடு’ இயக்குர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பயின்றவர்.

இந்த ஆல்பத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் விரைவில் ஆல்பம் வெளியாகும் என இந்தக் குழு அறிவித்துள்ளது..

 

Our Score