கவிதாலயா தயாரிப்பில் பரத் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’..!

கவிதாலயா தயாரிப்பில் பரத் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’..!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன் 2008-ம் ஆண்டில் கவிதாலயா நிறுவனம் ‘திருவண்ணாமலை’ படத்தை தயாரித்திருந்தது.

இந்த படத்திற்கு “ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பரத்துக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், மேல்படிப்பு படித்தப் பெண்ணுக்கும் பொருந்தாத் திருமணம் நடைபெறுகிறது. அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கூறும் படம்தான் இது.

இந்த  படத்தில்  பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள்.  இத்தனை நகைச்சுவை நடிகர்கள் நடிப்பது பற்றி டைரக்டர் எல்.ஜி.ரவிச்சந்திரன் கூறுகையில்,  “காதலிக்க நேரமில்லை,’  ‘உள்ளத்தை அள்ளித்தா’ பாணியில் இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். அதனால்தான் 21 நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள்.

பரம்பரை பரம்பரையாக சித்த வைத்திய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக பரத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நந்திதா கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

இங்கே வடிவேலுவைப்போல் கன்னட பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகரான கோமல் குமாரை இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்கிறோம். ஒரு நீக்ரோ பாடகருடன் சேர்ந்து கானா பாலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். ‘555’ படத்துக்கு இசையமைத்த சைமன், இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.. விரைவில் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும்..’’ என்றார்.

Our Score