விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங் துவங்கியது

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங் துவங்கியது

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. இது அவரது 65-வது படமாகும். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் யோகி பாபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

கடந்த மாதம் இந்தப் படத்திற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் 17 நாட்கள் நடைபெற்றது. அப்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால் படப்பிடிப்பை சுருக்கமாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்கள் படக் குழுவினர்.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

இந்தப் படப்பிடிப்பில் விஜய்-பூஜா ஹெக்டே டூயட் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக பூஜா ஹெக்டே சில நாட்களுக்கு முன்பிருந்தே ஒத்திகை பார்த்து வந்தார். நேற்று இரவுதான் பூஜா ஹெக்டே சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

தற்போது சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் பலத்த பாதுகாப்புடன் இந்தப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் பங்கு பெறும் அத்தனை பேரும் கொரோனா தடுப்பூசி இரண்டு முறையும் போட்டுக் கொண்டுதான் வர வேண்டும் என்று முன்பேயே சொல்லியிருக்கிறார்களாம்.

இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

Our Score