full screen background image

பாலன் – தி பாய் – சினிமா விமர்சனம் 

பாலன் – தி பாய் – சினிமா விமர்சனம் 

நடிகர்கள் :-

ஃபர்ஸானா பலத்திங்கல்​ – அம்மா
ஆதிஷேஷன் கே.ஆர் – இளம் பாலன்
சினான் – வயது வந்த பாலன்
ஜீன் பால் லால் – பவித்ரன் கே.எஸ்.
கிரிஷ் யு.னு. – எஸ்.ஐ. பிரான்சிஸ் அலெக்ஸ்

தொழில் நுட்ப கலைஞர்கள்:-

இயக்கம்: சிதம்பரம்
எழுத்து: ஜித்து மாதவன்
தயாரிப்பாளர்கள்: வெங்கட் கே. நாராயணா (கே.வி.என்.புரொடக்ஷன்ஸ்), ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்)
ஒளிப்பதிவு: ஷைஜூ காலித்
இசை: சுஷின் ஷியாம்
படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
கலை இயக்கம்: அஜயன் சாலிசேரி
பத்திரிக்கை தொடர்பு: வெங்கடேஷ்

இந்தப் படம் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டருக்கு வந்துள்ளது.

இந்தப் படம் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விபச்சார வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பெர்சானா அப்போது கர்ப்பிணியாகவும் இருக்கிறார். அவருடைய மகனான பாலன் சிறையில் இருக்கும்பொழுதே பிறந்து விடுகிறான். இதற்கு பின்பு அவர் தண்டனையை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து மகனுடன் வெளியில் வருகிறார்.

விபச்சார தொழில் செய்ய மனம் இல்லாமல் கிடைத்த இடங்களில், கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து கொண்டே இருக்கிறார். அதே சமயம் இவர் எங்கெங்கு வேலை பார்க்கிறாரோ அங்கெல்லாம் கொலைகள் நடந்திருக்கின்றன. அப்படி தப்பி தப்பி வந்தவர் கடைசியாக ஒரு வயதான அம்மாவை வீட்டிலிருந்து பார்த்துக் கொள்ளும் தாதி வேலை கிடைக்க தன் மகனுடன் இங்கு வந்து விடுகிறார்.

இந்த இடத்திலேயே தங்கிவிடலாம் என்று முடிவு எடுத்து தன்னுடைய மகனையும் அருகில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட்டில் சேர்த்து விடுகிறார்.

இந்த வயதான பாட்டியின் மகன் அமெரிக்காவில் இருப்பதால் தினமும் மதியம் மட்டுமே போனில் அழைப்பு விடுத்து இந்துவிடம் மட்டுமே பேசுகிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று அந்த அம்மா இறந்து போக அம்மா உயிருடன் இருப்பதாக காட்டினால்தான் நாம் இந்த வீட்டில் இருக்க முடியும் என்று நினைக்கும் பர்சனா யாருக்கும் தெரியாமல் அந்த அம்மாவை தோட்டத்திலேயே புதைத்து விட்டு அவர் இருப்பது போலவே அவருடைய மகனுக்கு தெரியப்படுத்துகிறார்.

திடீரென்று ஒரு நாள் இந்த அம்மாவின் மகள் அம்மாவை பார்க்க வர அந்த நேரத்தில் பர்சானா எடுத்த ஒரு முடிவு அவரையும், அவரது மகனையும் பிரித்து விடுகிறது.

இதற்குப் பிறகு என்ன நடந்தது? அந்த அம்மாவின் மகள் வரும்பொழுது என்ன நடந்தது/ தன்னுடைய மகனை இழந்த பெர்சானா மீண்டும் தன் மகனை சந்தித்தாரா? இல்லையா? இதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

ஒரு கதாபாத்திரமாக நடிப்பதற்கு ஹீரோவாக இருந்தாலும் சரி.. ஹீரோயினாக இருந்தாலும் சரி… முகவெட்டு சிறப்பாக இருந்தாலே போதும். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஃபர்ஸானாவின் முகம் கேமராவுக்கேற்ற முகம். அதோடு நடிப்பையும் சிறிதும் வஞ்சகம் இல்லாமல் கொடுத்திருக்கிறார். இவருடைய நடிப்புதான் இந்தப் படத்தை கடைசி வரையிலும் நம்மைப் பார்க்க வைத்திருக்கிறது..

இவருடைய சிறு வயது மகனாக நடித்த பையனும், இளைஞனாக நடித்த ஜனினும் நடிப்பை சிறப்பாகக் காண்பித்திருக்கிறார்கள். அதிலும் எஸ்.ஐ. பவித்ரனிடம் “என் அம்மாவை காட்டுங்கள்” என்று போய் சண்டையிடுவதும்.. பேசுவதும்.. கடைசியில் சப் இன்ஸ்பெக்டரை ஏமாற்றி விட்டு தப்பிப்பதுமாக அந்தக் கதாப்பாத்திரம் நமக்கு மிகவும் பிடித்துப் போய் விடுகிறது.

வயதான அம்மாவாக நடித்தவரும் தன்னுடைய அறிமுக காட்சியில் இருந்து அவர் மரணிக்கும் வரையிலும் ஒரு அழகான, நல்லதொரு நடிப்பையே கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் டொவினோ தாமஸ் இடைவேளைக்கு பின்புதான் வருகிறார். அவர் பர்சானாவின் மகனை தன்னுடன் அழைத்துச் சென்று அவனை வளர்த்து எடுத்திருக்கிறார். அந்தக் காட்சிகளில் எல்லாம் டெபினாவின் அலட்சியமான அந்த நடிப்பு மிகச் சிறப்பு என்றே சொல்லலாம்.

சப் இன்ஸ்பெக்டர் பவித்ரனாக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால் ஒரு வினையமிக்க, பொழைக்க தெரிந்த சாடிஸ்ட் மனப்பான்மையுள்ள ஒரு மனிதனாக தன்னுடைய நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சஞ்சீவ் காலேஜ் கேரளத்தில் அந்த அழகான கிராமத்தையும் அந்தப் பாட்டியின் வீட்டையும், போலீஸ் ஸ்டேஷனில் உள்ளேயும் எவ்வளவு அழகாக படம் பிடிக்க முடியுமோ அதை அப்படியே படம் பிடித்திருக்கிறார்.

பர்சானாவின் மகன் ஸ்கூலில் இருந்து வீடு திரும்பும்போது அம்மாவுக்கு காத்திருக்கும் காட்சியைப் பார்க்கும்போது இப்படி ஒரு இடத்தில் நாம் போய் செட்டில் ஆகிவிடலாமே என்ற எண்ணம் நமக்கு தோற்றுகிறது.

சுஷின் ஷாமின் இசையில் பின்னணி இசை ஒரு த்ரில்லர் படங்களுக்கு ஏற்றதாக அமைந்து படத்திற்கு பலம் கொடுத்துள்ளது.

சஸ்பென்ஸ், திரில்லர் என்பதால் அதை கடைசி வரையில் கொண்டு சென்று படத்தை பார்க்க வைக்கும் அளவுக்கு நம்மையும் கதைக்குள் ஈர்த்திருக்கிறார் பட தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்.

வாழ்க்கையில் நிறைய நம்பக் கூடாதவர்களை நம்பி தன்னுடைய வாழ்க்கை தொலைத்துவிட்ட அந்த ஹீரோயின் பர்ஸானா, இனிமேல் தானும் தன் மகனும் நிரந்தரமாக அமைதியாக இருக்க ஒரு இடத்தை தேடுவதுதான் இந்தப் படத்தின் அடிப்படை கதை. அதை வைத்து மற்ற சம்பவங்களை இணைத்து எழுதியிருக்கிறார் கதாசிரியர் ஜித்து மாதவன். அவருடைய பரபரப்பான அந்த திரைக்கதையும், இந்தப் படத்தை கடைசி வரையில் பார்க்க வைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் கதாபாத்திரங்களை அழகாக வடிவமைத்து அவர்களுக்கு நடிப்பையும் வரவழைத்து ஒட்டு மொத்த தொழில் நுட்ப கலைஞர்களை வைத்தும் ஒரு சிறப்பான திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் மஞ்சும்மாள் பாய்ஸ் இயக்குநரான சிதம்பரம்.

இரண்டாவது படத்திலேயே தன்னுடைய மிகச் சிறந்த இயக்கத்தினால் சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கும் சிதம்பரம், இந்த படத்தையும் மிகப் பெரிய அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.

யூகிக்க முடியாத திரைக்கதையும், கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்பினாலும் ஒரு சிறந்த படத்தை பார்க்கும் அனுபவத்தை இந்தப் படம் நமக்கு கொடுத்திருக்கிறது.

இயக்குநருக்கும், அவரது தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்!

RATING : 3 / 5

Our Score