பாலா தயாரிக்கும் ‘வசந்தகுமாரனி’ல் விஜய் சேதுபதி..!

பாலா தயாரிக்கும் ‘வசந்தகுமாரனி’ல் விஜய் சேதுபதி..!

இயக்குனர் பாலா படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். அவருடைய பி ஸ்டூடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ் களஞ்சியத்தின் ஸ்டூடியோ 9 புரொடெக்சன்ஸுடன் இணைந்து மிக பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார்.

vijay-sethupathi

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு பெயர் ‘வசந்த குமாரன்’. பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது. சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’,  ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் குமரேசன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

கதாநாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுவொரு அழகான காதல் கதை, இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளது. இசை – ஜஸ்டின் பிரபாகரன் எடிட்டிங் – கோவிந்த் ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன் கலை – மாயா பாண்டி தயாரிப்பு – பாலா , சுரேஷ் களஞ்சியம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ஆனந்த் குமரேசன்

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது,.