இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த ‘சண்டி வீரன்’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீகீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’, மற்றும் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ போன்ற படங்களைத் தயாரித்தது பி ஸ்டுடியோஸ். பாலாவின் சொந்தப் பட நிறுவனம் இது.
தற்போது பாலா இந்த பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘சண்டி வீரன்’ என்னும் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
‘இந்த ‘சண்டி வீரன்’ படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை எம்.எஸ்.சரவணனின் ஸ்ரீகீரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஸ்ரீகீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே ‘சலீம்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற வெற்றிப் படங்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ‘சலீம்’ திரைப்படத்தையும், சென்னை சிட்டி ஏரியாவில் ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் ‘கயல்’ படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘பிட்சா 2’, ‘வெள்ளைக்கார துரை’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளனர். இப்போது இந்த ‘சண்டி வீரனை’ தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வெளியிடவிருக்கின்றனர்.