full screen background image

‘அவதார வேட்டை’ துவங்கியது..!

‘அவதார வேட்டை’ துவங்கியது..!

ஸ்டார் குஞ்ச்மோன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘அவதார வேட்டை’.

இந்தப் படத்தில் வி.ஆர்.விநாயக், பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ்கான், மனோபாலா, இயக்குநர் வேல்முருகன், மகாநதி சங்கர் மற்றும் நடிகை விஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஏ.காசி விஷ்வா, படத் தொகுப்பு – கேசவன் சாரி, வசனம் – கே.எஸ்.சரவணன், இசை – எம்.எஸ். ஜான்ஸ் ரூபர்ட், பாடல்கள் – காவியன், நடனம் – அசோக் ராஜா, ராதிகா, கலை இயக்கம் – பத்மநாபன், தயாரிப்பு – ஸ்டார் குஞ்ச்மோன், இயக்கம் – சாஜன் லால்.

இந்தப் படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன், ரியாஸ்கான், நடிகை உமா ரியாஸ்கான், நடிகை விஜி, நடிகை சுஜாதா மற்றும் திரைப்படத்தில் பங்கு பெறும் அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

 

Our Score