full screen background image

ஆகஸ்ட் 16, 1947 படத்தின் போஸ்டர் வெளியானது..!

ஆகஸ்ட் 16, 1947 படத்தின் போஸ்டர் வெளியானது..!

அற்புதமான கதை சொல்லியான ஏ.ஆர். முருகதாஸ் இந்த முறை தயாரிப்பாளராக மீண்டும் ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தில் களம் இறங்கி இருக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி இந்தப் படம் பேசுகிறது.

பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்சன் சார்பில் ஏ.ஆர். முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ஆதித்ய ஜோஷி ஆவார்.

கெளதம் கார்த்திக், புகழ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை N.S.பொன்குமார் இயக்கி இருக்கிறார்.

ஒரு சுதந்திர சகாப்தத்தைப் பற்றிய கதையான ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தில் ஒரு சிறிய கிராமம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வாழ்வையே அசைத்துப் பார்த்தது.

இந்தியாவின் சுதந்திரம் குறித்து பரபரப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கக் கூடிய இந்த ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டர் குடியரசு தினமான இன்று வெளியாகியுள்ளது.

கண்ணைக் கவரும்படி அமைந்துள்ள இந்த போஸ்டர் தேசபக்தி மற்றும் படத்துடைய ஆன்மாவை தாங்கி நிற்கிறது. படத்தின் முன்னணி கதாநாயகன் கையில் டார்ச்சுடனும் கண்ணில் எரியும் தாய் நாட்டு தேசபக்தியுடனும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நெருப்பு ஒரு பெரிய புரட்சிக்கு வித்திட்டதா அல்லது இந்த நாயகர்களுக்கு சோகமான முடிவை கொடுத்ததா? இந்த கேள்விகளுக்கான விடையை படம்தான் கொடுக்கும்.

அப்படியான இந்தக் கதையின் போஸ்டர், குடியரசு தினத்தன்று வெளியாகி இந்நாளை மேலும் சிறப்பாக்கியுள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Our Score