E-5 ENTERTAINMENT IND PVT LTD நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் ஏற்கெனவே ‘அரிது அரிது’, ‘ஈசா’ ஆகிய இரண்டு தமிழ் திரைபடங்களை தயாரித்துள்ளார். இப்போது IMAGINARY MISSIONS நிறுவனத்தின் கார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து ‘அட்டி’ என்கிற தமிழ் திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர் ‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில், இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்போதுதான் முதன்முறையாக ‘அட்டி’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக அஷ்மிதா, மற்றும் முன்னணி கதாபாத்திரத்தில் ராம்கி யும் நடிக்கின்றார். இதன் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன். இவர் ‘மெய்யழகி’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர். இத்திரைப்படம் அவரின் அடுத்த படைப்பு. எடிட்டர் ராஜேஷ், இவர் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘சலீம்’ ஆகிய திரைப்படத்தின் படத் தொகுப்பாளார்.
இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, இவர் ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நாடோடிகள்’ ஆகிய வெற்றி படங்களின் இசையமைப்பாளர். இவர்தான் இந்த அட்டி படத்துக்கும் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் பாடல்களை மதன்கார்க்கி, சினேகன், அண்ணாமலை, விஜயசாகர், கவிவர்மன் மற்றும் கானா வினோத் ஆகிய முன்னணி பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.
முன்னணி கதாநாயகர்களின் சண்டைப் பயிற்சி ஆசானாக விளங்கும் பவர் பாண்டியன் மாஸ்டர் இதில் சண்டை பயிற்சி இயக்குனராக பணிபுரிகிறார்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை கடை வைத்திருக்கும் கதாநாயகன் மற்றும் நண்பர்கள் பற்றிய கதை இது. சந்தோஷமாக வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு எதிர்பாராமல் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை சாதூர்யமாக எப்படி கதாநாயகன் சமாளித்தார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சித்தரிக்கும் பொழுதுபோக்கு திரைப்படம்தான் இந்த ‘அட்டி’…!