ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ் INC சார்பில் ராமகிருஷ்ணன் நாயர் தயாரித்திருக்கும் படம் ‘அதிதி’. இது சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘காக்டெயில்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்.
நந்தா – அனன்யா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, சென்ராயன், பேபியுவினா, சம்பத்ராம், காஜல் பசுபதி, பாடகர் பிரசன்னா, இன்னொரு முக்கிய வேடத்தில் அஸ்வதி வர்ஷா நடித்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் கட்சியில் ரக்சனா மௌரியா நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – ஜெய். இவர் ஒளிப்பதிவாளர் எஸ்.மதியின் உதவியாளர்.
இசை – பரத்வாஜ்
பாடல்கள் – நா.முத்துகுமார், பா.விஜய், கே.சாந்தமோகன்
கலை – எம்.கார்த்திக் ராஜ்குமார்
நடனம் – பாலகுமார், ரேவதி, பாபா பாஸ்கர்.
எடிட்டிங் – பிரவீன்.கே.எல்,
ஸ்டண்ட் – விக்கி
தயாரிப்பு நிர்வாகம் – குமார் வீரப்பசாமி
தயாரிப்பு மேற்பார்வை – சிவகுமார்
திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். இவர் விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியதுடன் ‘கில்லி’, ‘தூள்’, ‘மதுர’, ‘ஒஸ்தி’, ‘தில்’, ‘வீரம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார்.
தயாரிப்பு – ராமகிருஷ்ணன் நாயர்
படம் பற்றி இயக்குனர் பரதனிடம் கேட்டோம்…
“அதிதி’ என்றால் சுத்தத் தமிழில் ‘விருந்தினன்’ என்று பெயர். இளம் ஜோடிகளான நந்தா, அனன்யா வாழ்க்கையில அதிதியாக அதாவது அழையா விருந்தாளியாக நுழையும் நிகேஷ்ராம், அவர்களுக்கு என்ன மாதிரியான இடைஞ்சல்களைத் தருகிறான் என்பதுதான் கதை..! ரசனை மிகுந்த படமாக ‘அதிதி’ உருவாகியிருக்கிறது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெற்று முடிந்திருக்கிறது..” என்றார் பரதன்.