full screen background image

‘அஸ்வின்ஸ்’ படம் ஜூன்-9-ம் தேதி வெளியாகிறது!

‘அஸ்வின்ஸ்’ படம் ஜூன்-9-ம் தேதி வெளியாகிறது!

சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் மேஜிக் டச்சான ‘அஸ்வின்ஸ்’  ஜூன் 9 அன்று தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ராவின்(SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்குகிறார். பிரவீன் டேனியல் இணைந்து தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் வசந்த் ரவி, விமலா ராமன், ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படப் புகழ் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் (‘நிலா காலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர்) மற்றும் மலினா ஆகியோர் நடித்துள்ளனர்.

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இதற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார்.  எட்வின் சாகே ஒளிப்பதிவையும், வெங்கட் ராஜன் படத் தொகுப்பையும் கையாள்கிறார்கள். அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார்.

திறமையான கலைஞர்களைக் கொண்டுள்ள இந்தப் படம் ஏற்கனவே வர்த்தக வட்டாரங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் OTT உரிமையைப் பெற்றபோது ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டது படம் இன்னும் பல புதிய உயரங்களை அடைய உதவியது.

தற்போது தமிழக திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி பெற்றுள்ளதால், இதன் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தை ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் காணத் தயாராகுங்கள்.

Our Score