full screen background image

8 மாத தேடுதல் வேட்டைக்குப் பின்பு கிடைத்த ஹீரோயின்..!

8 மாத தேடுதல் வேட்டைக்குப் பின்பு கிடைத்த ஹீரோயின்..!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருவி.’

இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு – ஷெல்லி கலிஸ்ட், இசை – பிந்து மேனன், வேதாந்த பரத்வாஜ், எழுத்து, இயக்கம் – அருண் பிரபு புருஷோத்தமன், தயாரிப்பு – எஸ்.ஆர். பிரபு , எஸ் . ஆர். பிரகாஷ் பாபு

உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சமூகம் – அரசியல் கலந்த படமாக இது உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கான தேர்வு மட்டும் 8 மாதங்கள் நடந்துள்ளது. தேர்வில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டோரிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்தான் நாயகி அதீதி பாலன். இப்படத்தில் அதீதி பாலன் ‘அருவி’ என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார்.

அருவி எனும் இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக் கூடிய சுவாரஸ்யமான விஷயங்களின் தொகுப்புதான் இப்படத்தின் கதைக் களம். ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இப்படம் அருவி என்ற பெண்ணின் வாழ்க்கை வரலாறு போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் இப்படம் அருவி சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சனை, அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்த பேசும் ஒரு கதையாக இருக்கும்.

மேலும் இப்படத்தில் முகமது அலி பாய்க் என்ற ஹைதராபாத்தை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட், அஞ்சலி வரதன் என்ற திருநங்கை, லட்சுமி கோபால்சாமி என்ற கன்னட நடிகை, மதன் என 20க்கும் மேற்பட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், மும்பை இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் கேரளா, தி ஹபிடேட் பிலிம் பெஸ்டிவல் டெல்லி, தி பயோஸ்கோப் குளோபல் பிலிம் பெஸ்டிவல் பஞ்சாப் என பல்வேறு பிலிம் பெஸ்டிவல்களில் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Our Score