‘அருவா சண்ட’ படப்பிடிப்பில்  நிஜமான அருவா வெட்டு..!

‘அருவா சண்ட’ படப்பிடிப்பில்  நிஜமான அருவா வெட்டு..!

ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம் ‘அருவா சண்ட.’

இந்த படத்தில் மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், சரண்யா பொன்வண்ணன், சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, ‘காதல்’ சுகுமார், சரத், அம்பானி சங்கர், ரஞ்சன், சிவசங்கர், தளபதி தினேஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

கலை - ஏ.டி.ஜெ, சண்டை பயிற்சி - மிரட்டல் செல்வம், நடனம் - சிவசங்கர், தீனா,  தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்.ஜி, டிசைன்ஸ் சபீர், இதை – தரண், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – வி.ஜே.சாபு, எழுத்து, இயக்கம் – ஆதிராஜன்.

இயக்குநர் ஆதிராஜன் எழுதி, இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் வில்லன் ஆடுகளம் நரேனின்  மருமகனாக சொந்தர்ராஜா நடிக்கிறார். படத்தின் நாயகன் ராஜாவும், சொந்தர்ராஜாவும் அருவாளுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நடைபெற்றது.

பிரபல சண்டை பயிற்சியாளர் தளபதி தினேஷ் இந்த சண்டைக் காட்சியை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள் ராஜாவின் தாடையில் வெட்டியது. அதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது.

படக் குழுவினர் பதட்டத்துடன் ஓடிச் சென்று ஐஸ்கட்டி வைத்து முதலுதவி செய்தனர். பின்பு ராஜாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன்  பின்னரும் இருவரும் மோதும் சண்டைக் காட்சி எடுத்து முடிக்கப்பட்டது.

தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.