இயக்குநர் ராதாமோகனோடு மீண்டும் இணையும் நடிகர் அருள்நிதி 

இயக்குநர் ராதாமோகனோடு மீண்டும் இணையும் நடிகர் அருள்நிதி 

உணர்வுப்பூர்வமான கதைக் களங்களால் நெஞ்சை வருடிச் செல்லும்  இயக்குநர் ராதா மோகன் தற்போது நடிகர் அருள்நிதியை வைத்து பிருந்தாவனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது.  

இந்த நிலையில் அருள்நிதியின் அடுத்த படத்தையும் ராதாமோகனே இயக்கப் போகிறாராம். 

இது குறித்து பேசிய நடிகர் அருள்நிதி, “இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில் நான் நடித்து வரும் ‘பிருந்தாவனம்’ படம் மிக அழகாக உருவாகி இருக்கிறது.

எனக்கும், ராதா மோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு  சிறப்பான அனுபவம் கிடைக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன்.  

தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருக்கிறார். புதிய படத்திற்கான கதைக் களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை சரியான நேரத்தில் அறிவிக்க இருக்கின்றோம்.  

தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வரும் ஜூலை மாதம் முதல் இந்தப் புதிய படத்தின் வேலைகளை துவக்கவிருக்கிறோம்..” என்று உற்சாகமாகக் கூறினார்.

Our Score