ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் பாகம்-2’.
இதில் கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார். புதுமுகமாக சிம்ரன்கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி, மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத் திவாரி, பேபி யுனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – H.C. வேணுகோபால்
இசை – அர்ஜுன் ஜெனியா
பாடல்கள் – வைரமுத்து
கலை – சசிதர் அடாபா
வசனம் – ஜி.கே. கோபிநாத்
எடிட்டிங் – கே.கே
நடனம் – ராஜு சுந்தரம், தினேஷ்
ஸ்டன்ட் – பவர்பாஸ்ட் பாபு – கஜு
நகைச்சுவை பகுதி – ராஜகோபால். A
இணை தயாரிப்பு – ஐஸ்வர்யா, அஞ்சனா
கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்
படம் பற்றி இயக்குனர் அர்ஜுன் கூறுகையில், “ஒரு நாடு வல்லரசு நாடாக மாறவேண்டுமானால் பண பலம், படை பலம் ஆகியவற்றை மீறின ஒரு விஷயம் என்னவாக இருக்கும் என்றால் கல்விதான். நல்ல அறிவாளிகள் இருந்தால் நாட்டை மேம்பட வளர செய்வார்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி ஜெய்ஹிந்த் – 2 படத்தை உருவாக்கி வருகிறோம்.
ஐரோப்பிய நாடுகளில் நானும் கதாநாயகி சிம்ரன் கபூரும் பங்கேற்ற சேசிங் காட்சிகள் ஹைவே ரோட்டில் படமாக்கினோம் படு திரில்லிங்கான காட்சிகள் படமாக்கப்பட்டது
சிங்கப்பூரில் ‘கார்டன் பை தி வே’ என்ற இடத்தில் ‘இவன் யார்? இவன் நெருப்பானவன்’ என்ற பாடல் காட்சியில் நானும் சிம்ரன் கபூரும் பங்கேற்க படமாக்கினோம். உலகத்தில் உள்ள எல்லாவிதமான மரம், செடி, கொடிகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கப்படும் இடம் அது. இங்கு இதுவரை யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பதும் இந்த பாடலின் சிறப்பம்சம்.
படத்தின் 95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள்தான் பாக்கி. விரைவில் படத்தை திரையிட உள்ளோம்..” என்றார்.