full screen background image

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி நல்ல கவனம் பெற்றிருக்கிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திரமான மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Dev Cinemas Pvt Ltd சார்பில் D. தங்கபாண்டி மற்றும் S.கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

கதாநாயகியாக அனாமிகா மகி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், அயலி மதன், சுப்பிரமணியன் சிவா, மைனா நந்தினி, சவுந்தர்யா, சென்ராயன், ஹலோ கந்தசாமி, பாவா லட்சுமணன், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

படத்திற்கு இசையமைத்துள்ளார் D. இமான், ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா, எடிட்டிங் – காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – B. சேகர், வசனம் – M.R. அருண் சந்தர், சண்டை இயக்குநர் – ஓம் பிரகாஷ், ஆடை வடிவமைப்பை K. நட்ராஜ் செய்துள்ளனர்.

யோகி பாபுவை இதுவரை பார்த்த காமெடி ரோலில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகரமான கதையின் மையக் கதாபாத்திரமாக இந்த படம் காட்டுகிறது.

“அர்ஜுனன் பேர் பத்து” என்ற தலைப்பு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடரிலிருந்து வந்தது. இடி மின்னலுக்கு பயப்படும்போது “அர்ஜுனா! அர்ஜுனா!” என்பதுபோல, அப்பகுதி மக்களிடம் “அர்ஜுனன் பேர் பத்து” என்பது பரவலாக பேசப்படும் ஒரு வார்த்தை.

இந்த படம் சாதாரண காமெடி படம் கிடையாது. பழைய வாகனங்கள் வாங்கி விற்கும் போது நடக்கும் மோசடிகள், அதனால் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வாழ்க்கை வலி, மேலும் இனி பழைய வாகனங்கள் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படம்.

இந்த எல்லாவற்றையும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு விறுவிறுப்பாக சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

இந்தக் கதையை எல்லா தரப்பினரும் புரிந்து ரசிக்கும் வகையில், உணர்ச்சியோடு திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் ரா.ராஜ்மோகன்.

படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

விரைவில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என படக் குழு தெரிவித்துள்ளது.

The first look of “Arjunan Paer Pathu”, starring Yogi Babu as the lead, has been released today and is receiving strong attention.

The first look was unveiled on social media by leading star Makkal Selvan Vijay Sethupathi.

Produced by D. Thangapandi and S. Krithika Thangapandi under the banner Dev Cinemas Pvt Ltd, the film is directed by debutant R. Rajmohan.

This film presents Yogi Babu in a role very different from his usual comedy appearances, placing him at the center of an emotional and realistic story.

The title “Arjunan Paer Pathu” comes from a popular local expression used in and around Madurai and the southern districts of Tamil Nadu. Just as people elsewhere shout “Arjuna! Arjuna!” during thunder and lightning, people in these regions commonly use the phrase “Arjunan Paer Pathu” in everyday speech.

This is not a routine comedy film. The story focuses on scams involved in the buying and selling of second-hand vehicles, the struggles of people affected by these frauds, and also aims to create awareness among those planning to purchase used vehicles

The film is based on real incidents and is presented in a fast-paced, engaging manner.

Director R. Rajmohan has shaped the screenplay with strong emotions, making it relatable and appealing to audiences of all sections. Anamika Mahi makes her debut as the female lead. The film also features Kaali Venkat, Aruldoss, Ayali Madan, Subramaniyan Siva, Myna Nandhini, Soundarya, Sendrayan, Hello Kandasamy, Bhava Lakshmanan, and Ranjan Kumar. Director Lenin Bharathi appears in an important role.

Music is composed by D.Imman, Cinematography by Pradeep Kaliraja, Editing by Kasi Viswanathan, Art direction by B. Sekar, Dialogues by M.R. Arun Chandar. Action sequences are choreographed by Om Prakash, Costumes are designed by K. Nataraj.

The entire shoot has been completed in Chennai and its surrounding areas.

Post-production work is currently in full swing.

The makers have announced that details about the trailer and audio launch will be revealed soon.

 

Our Score