full screen background image

அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் துவங்கியது!

அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் துவங்கியது!

கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ உள்ளிட்ட  படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரது தயாரிப்பில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக ‘ஏஜிஎஸ் 28’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா,  பாலா ஹசன்  ஆகியோர்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

இவர் இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம்  உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலம் தமிழிலும் இசையமைப்பாளராக  அறிமுகமாகிறார்.   ‘கே.ஜி.எஃப்.’   இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். இப்படத்தின் ஒளிப்பதிவை அருண் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார்.

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் சுபாஷ் கே.ராஜ்.

இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக அமையவுள்ளது என்கிறது  படக் குழு.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Our Score