full screen background image

மும்பை ஹீரோயின்கள் நல்ல பயிற்சியோடு வருகிறார்கள் – நடிகர் அர்ஜூனின் விளக்கம்..!

மும்பை ஹீரோயின்கள் நல்ல பயிற்சியோடு வருகிறார்கள் – நடிகர் அர்ஜூனின் விளக்கம்..!

கோடம்பாக்கத்தில் தமிழ் நடிகைகளுக்கே பெரும் பஞ்சம். பாட்டி, அம்மா, சித்தி என்று குணச்சித்திர கேரக்டர்களுக்கு மட்டுமே இங்கே நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் ஹீரோயின்கள் என்றால் எல்லாமே மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவர்கள்தான்.

இவர்களுக்கு தமிழ்ச் சொல்லிக் கொடுத்தே டப்பா கழன்றுவிடுகிறது இணை இயக்குநர்களுக்கு.. முதல் சில படங்களில் டப்பிங் கலைஞர்களை வைத்து கொஞ்சம் எப்படியோ சமாளித்துவிடுகிறார்கள். ஆனால் போகப் போக தமிழை புரிந்து கொண்டு பேசி, நடிக்கும் நடிகைகள் மட்டுமே இங்கே தொடர்ந்தும் இருக்கிறார்கள்.

இப்படி மும்பையில் இருந்தே நடிகைகளை இறக்குமதி செய்தவன் காரணம் என்ன என்று படத்துக்குப் படம் மும்பை இறக்குமதி செயயும் நடிகர் அர்ஜூனிடம் கேட்டபோது அவர் அளித்திருக்கும் பதில் இது :

“நாயகிகள் தேர்வு என்று ஆடிஷன் வைக்கும்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மாடலிங் பெண்கள் எல்லோரும் நல்ல பயிற்சியோடு வருகிறார்கள்.

ஆடிஷனுக்கு வரும்போது 6 மாதம் நடிப்பு பயிற்சி, சண்டை பயிற்சி, நடனப் பயிற்சி என்று ஒரு முழுமையாக குறிப்பேட்டை முன் வைக்கிறார்கள். ஒரு காட்சியை அவர்களே கற்பனை சக்தியோடு உருவாக்கி நடித்தும் காட்டுகிறார்கள். இதனால் அவர்களை வைத்து படம் எடுக்கும்போது எளிதாக இருக்கிறது.

அதனால்தான் ‘ஜெய்ஹிந்த் 2’ படத்திலும் சுர்வீன் சாவ்லா, சிம்ரம் கபூர் ஆகிய இரண்டு வட இந்திய நாயகிகளை அறிமுகப்படுத்தியுள்ளேன்…” என்கிறார்.

அர்ஜூன் சமாளித்திருக்கிறார். அவ்வளவுதான்.. உண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள், மும்பை பெண்களை போல கவர்ச்சி காட்டி நடிக்க முன் வருவதில்லை. இதுதான் உண்மையான காரணம்..!

இதையெல்லாம் வெளில சொல்ல முடியுங்களா..?

Our Score