full screen background image

மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள “அறிவான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள “அறிவான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆவலைத் தூண்டும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி திரை பிரபலங்களான இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி, அல்போன்ஸ் புத்திரன், நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணையம் வழியே இன்று வெளியிட்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் நெய்வேலியில் 65 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இம்மாதம் படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக் குழு திட்டமிட்டு வருகிறது.

விரைவில் படத்தை திரைக்குக் கொண்டு வரவும் படக் குழு திட்டமிட்டுள்ளது.

Our Score