மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கிறார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார்.
மேலும் நடிகர் தம்பி ராமையா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிவுள்ளார். மற்றும் சாந்தினி, ஹாசினி, ஹரீஷ் உத்தமன், ராஜ்கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
கலை இயக்கம் – சிவயாதவ், ஒளிப்பதிவு – கோகுல், இசை – டி.இமான், படத் தொகுப்பு – ஆண்டனி, எழுத்து, இயக்கம் – செல்வா.
இத்திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியது.
Our Score