விரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..!

விரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..!

30-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம் முதல்முறையாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’..!

இந்தப் படத்தில் வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான அவினாஷ் ஹரிஹரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம் ரசிகர்களை விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது. தற்போது இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நடிகர் வீரா இந்தப் படத்தில் நடித்தது பற்றிக் கூறும்போது,  “ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்…” என்றார். 

arasiyalla-idhellam-saadharnamappa-movie-poster-2

படத்தின் இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் படம் பற்றிக் கூறும்போது, “நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ‘ராஜதந்திரம்’ படத்தின் விளம்பரப் பாடல்  நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம்.

அங்குதான்  ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’வின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப் பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட  மகேஷ் சாருக்கு நன்றி

இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் முன்னேறிக் கொண்டிருக்கும்போது ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை…” என்றார். 

படத்தின் தயாரிப்பாளரான ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது, “எனது 30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இதுதான் திரைப்பட தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன்.

உண்மையில், இது பார்வையாளர்களின் நாடித் துடிப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல கற்றல் அனுபவம். நான் என் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியபோது, பொழுதுபோக்கு மற்றும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது.

சினிமா ரசிகர்களுக்கு ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதிலும் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார். 

Our Score