full screen background image

பொள்ளாச்சியில் ‘அரண்மனை-3’ கடைசி கட்டப் படப்பிடிப்பு துவங்கியது

பொள்ளாச்சியில் ‘அரண்மனை-3’ கடைசி கட்டப் படப்பிடிப்பு துவங்கியது

‘கமர்ஷியல் கிங்’ என்று அழைக்கப்படும் இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ சீரிஸ் திரைப்படங்களின் முதல் இரண்டு பாகங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது இதன் அதன் தொடர்ச்சியாக ‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகமும் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் வழக்கம்போல சுந்தர்.சி-யின் அவ்னி மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்தப் படத்தில்  ஆர்யா, ராஷி கன்னா, சுந்தர்.சி, ஆண்டிரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சண்ட் அசோகன், மதுசூதன் ராவ், வேல.ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலபள்ளி லீலா என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் 2 கோடி ரூபாய் செலவில் கலை இயக்குநர் குருராஜின் உருவாக்கத்தில் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அரங்கத்தில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சியான இந்தச் சண்டை காட்சி தொடர்ச்சியாக 11 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டைக் காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ளார். இந்தப் படத்தில்தான் இயக்குநர் சுந்தர்.சி முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்னுடன் கை கோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக பேய் படங்களில் காமெடியும், கிராபிக்ஸும்தான் நிறைந்திருக்கும். ஆனால், சுந்தர்.சி இந்த ‘அரண்மனை-3’ படத்தில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை வைத்திருப்பதோடு, அவற்றுக்கு கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்திருக்கிறார்.

குஜராத் ராஜ்கோட், சென்னையில் படப்பிடிப்பை நடத்திய படக் குழுவினர் நேற்றைக்கு பொள்ளாச்சிக்கு ஷிப்ட்டாகியுள்ளனர். பொள்ளாச்சியில்  டிசம்பர் 1-ம் தேதிவரையிலும் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடாகியுள்ளது. அத்துடன் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைகிறது.

இந்த அரண்மனை-3’ திரைப்படம் 2021-ம் ஆண்டின் கோடை கால ஸ்பெஷலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score