இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘அறம் செய்து பழகு’.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘அறம் செய்து பழகு’.

அன்னை ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டனி இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இவர் AVM & Studio green நிறுவனங்களிலும், இயக்குநர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்தவர்.

இந்த புதிய திரைப்படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சந்தீப்க்கு ஜோடியாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன்(Mehreen) கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

‘வெண்ணிலாக் கபடி குழு’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் J.லஷ்மண் M.F.I.  மீண்டும் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார். முதன்முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார்.  படத் தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி.

இதுவரையில் பெயர் வைக்கப்படாமலேயே 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இன்றைக்குத்தான் இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘அறம் செய்து பழகு’ என்று அழகுத் தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள்..!

Our Score