full screen background image

குடியின் தீமைகளைப் பற்றி விளக்கும் ‘அப்பா… வேணாம்ப்பா…’ திரைப்படம்..!

குடியின் தீமைகளைப் பற்றி விளக்கும் ‘அப்பா… வேணாம்ப்பா…’ திரைப்படம்..!

பொதுவாக சமுதாயத்தில் பல பேர் குடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடி நோயாளிகள் அல்ல. தன் நிலை தெரிந்தும் குடியைவிட முடியாமல் குடித்து, குடித்தே துன்பப்படும் மனிதர்களே குடி நோயாளிகள். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இந்த ‘அப்பா.. வேணாம்ப்பா..’

ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்து சமுதாயத்தில் மிக கெளரவமான வேலைக்கு செல்லும் மனிதன் குடி நோயால் தன் வாழ்க்கையில் மானம், மரியாதை, வீடு, மனைவி எல்லாவற்றையும் இழக்கிறான். அதன் பின் மருத்துவ சிகிச்சையின் பலனாக அந்தக் குடி என்னும் அரக்கனிடமிருந்து மீண்டு இனி தன் வாழ்நாளில் குடி என்னும் பேயே இல்லை என்று உறுதிமொழி எடுக்கிறான். ஆனாலும் இப்போது அவனது மனைவி ‘அவன் திருந்தமாட்டான்’ என்கிற அவநம்பிக்கையில் அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். மீண்டும் அவன் என்ன ஆகிறான்? மறுபடி குடிக்கப்போகிறானா இல்லை திருந்தி வாழ்கிறானா? அவன் குடும்பம் அவனுடன் சேர்கிறதா? என்பதை பற்றி கூறுகிறது ‘அப்பா.. வேணாம்ப்பா…’

இதுவரை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் குடிப் பழக்கத்தை ‘நோய்’ என்கிற பார்வையில் சொல்லப்பட்ட திரைப்படம் எதுவும் வரவில்லை.. ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ என்னும் அமைப்பினால் பல லட்சம் பேர் குடியிலிருந்து திருந்தி வாழ்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது ‘அப்பா.. வேணாம்ப்பா.’

தினமும் தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் இந்த ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டங்கள் நடைபெறுகின்றன. எப்படி அவை குடிநோயாளிகளின் வாழ்க்கைக்கு உதவுகின்றன என்பதைப் பற்றியும் விளக்குகிறது ‘அப்பா.. வேணாம்ப்பா.’

இந்தப் படத்தின் இயக்குனர் வெங்கட்ரமணன் பல தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியவர். பல ஆவணப் படங்களை இயக்கி அவை சென்னை பொதிகையில் வெளிவந்திருக்கின்றன. இவர் இயக்குனர் வேலு பிரபாகரனிடம் உதவியாளராக பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித்தொடரிலும் பணியாற்றியவர். தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றியவர். 53 வயதிலும் ஒரு சமுதாய சிந்தனை உள்ள கதையை தேர்ந்தெடுத்து இதில் அவரே கதாநாயகனாக நடித்து இயக்கி, தயாரித்துள்ளார். முயற்சி உடையவர்களுக்கு வயது ஒரு தடை இல்லை என்பது இவருடைய உழைப்பின் மூலம் உலகிற்கு தெரியும்.

ஏறக்குறைய முற்றிலும் புதுமுக நடிக நடிகைகளைக் கொண்டு உருவான இப்படம் இந்த கால கட்டத்திற்கு மிகவும் ஏற்ற படமாகும். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உருவான மிகக் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களின் வரிசையில் இதுவும் அடங்கும்.

இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே குடி நோயாளிகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களே..அவர்கள் பல பேரை சந்தித்து அவர்கள் குடியால் இழந்தவற்றையும், திருந்தி பல பேர் வாழ்வதையும் கேட்டு தெரிந்து கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் இது.

TTK மருத்துவமனையில் மருத்துவராக பணி புரியும் டாக்டர் சிவசுப்ரமணியன் மருத்துவராகவும் மற்றும் கவுன்சிலராக சங்கரும் நடித்திருக்கிறார்கள். இம்மருத்துவமனையின் இயக்குனர் திருமதி. சாந்தி ரங்கநாதன் அவர்கள் இத்திரைப்படத்திற்கு அக்கறை கொண்டு உதவி இருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.

நடிகர்கள் : R. வெங்கட்ரமணன், ஜெயா மணவாளன் டாக்டர், சிவசுப்ரமணியன், சங்கர், மதுமிதா, மாஸ்டர் விஜய், முதல்வன் பக்தி, கர்ணா ராதா, ராஜீவ் கிருஷ்ணா, ராகவன்.

ஒளிப்பதிவு : வேல்முருகன் DFT & வேதா செல்வம் DFT

இசை : V.K.கண்ணன் (புதியவர்)

எடிட்டிங்/DI : ராஜேஷ் கண்ணன் DFT

பாடல்கள் : டாக்டர்.சிவா, வைரபாரதி, ஜி.ராமனாதன்

பாடியவர்கள் : கானாபாலா, R.குருராஜன்

கலை : முருகன், சீனிவாசன்

டிசைன்ஸ் : ஷிவா

மக்கள் தொடர்பு : A. ஜான்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் தயாரிப்பு: R. வெங்கட்ரமணன்

Our Score