நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஏ ஒ டி – AOT’ திரைப்படக் குழுவினர் – அப்படத்தில் இடம் பெறும் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ Mittai Mazhai’ -யை வெளியிட்டுள்ளனர்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ‘மிட்டாய் மழை’ பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும்.
கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்… நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது.
காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்… பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்…
விடா முயற்சி – நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் – ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா- Aakasamlo Oka Thara- AOT’ திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார்.
லைட் பாக்ஸ் மீடியா ( Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.
‘MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY.
The makers of AOT celebrated Dulquer Salmaan’s birthday by unveiling the film’s first single, “Mittai Mazhai.”
Composed by GV Prakash Kumar, Mittai Mazhai is a feel-good melody that beautifully captures the emotional heartbeat of the story. Told from the heroine’s perspective, the song portrays her dream of touching the stars and the silent encouragement of the man who helps her move forward. It is a touching tribute to a unique bond that transcends traditional definitions of love.
Penned by Balaji Venugopal and sung by Ramya Behara, the song is enriched with poetic metaphors that symbolize perseverance, hope, and the quiet power that drives every dream.
Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, and Shruti Haasan, Aakasamlo Oka Tara is directed by Pavan Sadineni, produced by Sandeep Gunnam and Ramya Gunnam under Lightbox Media. The film is presented by Swapna Cinema and Geetha Arts.









