full screen background image

51 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் ‘அனு அண்ட் அர்ஜுன்’..!

51 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் ‘அனு அண்ட் அர்ஜுன்’..!

ஆவா என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி தயாரித்திருக்கும் ‘அனு அண்ட் அர்ஜூன்’ திரைப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளனர். மேலும், சுனில் ஷெட்டி, நவதீப், ரூஹி சிங், நவீன் சந்திரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறர்கள்.

ஒளிப்பதிவினை சால்டோன் சா செய்ய.. படத் தொகுப்பினை கௌதம் ராஜு மேற்கொண்டிருக்கிறார். சி.எஸ்.சாம் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஜெஃப்ரி ஜீ சின் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் 51 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

இதனால் தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுகிறார்களாம். படம் வரும் மார்ச் 19-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் மிக அதிகப் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் இது என்பதால் தெலுங்குலகில் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்..!

Our Score