full screen background image

ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021-ம் ஆண்டின் தீபாவளியன்று வெளியாகிறது..!

ரஜினியின் ‘அண்ணாத்த’ 2021-ம் ஆண்டின் தீபாவளியன்று வெளியாகிறது..!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படம் வரும் இந்த வருடத் தீபாவளின்று அதாவது நவம்பர் 4-ம் தேதி வியாழக்கிழமையன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தபோது படக் குழுவினர் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டது என்பதும் அதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஒரு சில மாதங்களுக்குப் பின்னர்தான் துவங்கும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வருட தீபாவளியை ’தலைவர் தீபாவளி’ என ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Our Score